படங்கள்

Spread the love

அம்மா வீட்டில்
சுவர்களே தெரியாமல்
மகளின் படங்கள்தான்

மகள் வீட்டில்
அலசி அலசிப் பார்த்தாலும்
அம்மா படமே இல்லை

அம்மா கேட்டார் மகளிடம்
‘என் படம் மட்டும்
ஏனம்மா இல்லை’

மகள் சொன்னார்
‘உங்கள் வீட்டில்
‘உங்கள் அம்மா படம்
ஏனம்மா இல்லை’

அமீதாம்மாள்

Series Navigation(80) – நினைவுகளின் சுவட்டில்இதற்கு அப்புறம்