பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால் மனிதன்? பிறந்த உடனேயே புலம்பெயர்ந்தாலும்கூட பிறந்தமண்ணைத் தேடிவந்து பார்த்துவிட்டுப்போக ஆசைப்படுகிறான். நான் 70ஐக் கடந்துவிட்டேன். என்னோடு பட்டம் விட்டவர்கள், பம்பரம் குத்தியவர்கள், கிட்டிப்புல்லு ஆடியவர்கள், கோலிக்குண்டு அடித்தவர்கள், குட்டையில் மீன் பிடித்தவர்கள், உதைத்தவர்கள், உதைபட்டவர்கள் […]
அது ஒரு மழை மாதம். பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் முதியவர் மரணம்’. அரசு சும்மா இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன. நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]