படிமங்கள்

Spread the love

என் படிமங்கள்
ஒவ்வொன்றாக
அலங்கரிக்கப்படுகின்றன
அதன் கட்டமைப்பு
மிகவும் தொன்மையானவை
உலகில் தோன்றிய
முதல் உயிரின்
மிச்சங்கள் இதிலும்
இருக்கிறது .

படிமத்தின் அசைவுகளை
உன்னிப்பாக கவனிக்கிறேன்
அவையே என்னை
தீர்மானிக்கின்றன
எதை முன்னிலை
ஆக்குவது என்பதில்
பெரும் போட்டிகளும்
போராட்டங்களும்
நாளும் நடைபெறுகின்ற
இயல்பாகிறது .

புதிய படிமங்கள்
தோன்றுவதில்
பழையனவை
ஆதங்கம்
கொள்கின்றன
தான் இன்னும்
கீழே செல்கிறோம்
என்று
அவை இன்னும்
தொன்மையாகிறது
என்பதை அறியாமை
உடையவானகிறது .

நிறங்களின் தன்மையை
மேலும் கூட்டுகிறது
இதன் உருவங்கள்
பார்பதற்கு இன்னும்
நிகழ்வு நடைபெறவில்லை
அதனை நோக்கியே
முனைப்பும்
அடிகோலுகிறது .

-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationநினைவின் நதிக்கரையில் – 2கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்