படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் – மாணவர் சேர்க்கை.

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013



இந்தப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236

தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி பிரிவான படிமையில் இதுவரை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்காமல் இருந்து வந்தேன். நிலையான ஒரு இடம் இல்லாததே காரணம். ஆனால் இப்போது, தமிழ் ஸ்டுடியோவிற்காக ஒரு நண்பர் நல்ல அருமையான இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறார். எனவே மீண்டும் பயிற்சி இயக்கத்திற்கு மாணவர்களை சேர்க்க தொடங்கியுள்ளேன். படிமை என்பது சினிமாவை வெறும் கேளிக்கைப் பொருளாக பார்க்காமல், இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்கிற ரீதியில் மட்டுமே அணுகாமல், உலகம் முழுக்க மேம்பட்ட சமூகம், மேம்பட துடித்துக் கொண்டிருக்கும் சமூகம் சினிமாவை அணுகும் ரீதியிலும், மக்களுக்கான கலையாக, சினிமாவிற்கு என்று ஒரு மொழி இருக்கிறது என்கிற ரீதியில் அணுகவும், சினிமாவின் தொழில்நுட்பங்களை தாண்டி, அதன் அரசியல், அழகியல், வடிவம், உள்ளடக்கம் உள்ளிட்ட முக்கியமான கூறுகளை அறிந்துக் கொள்ளவும் படிமை பயிற்சியளிக்கிறது. இந்த பயிற்சி காலத்தில் கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா ஆளுமைகளும் இந்த பயிற்சி இயக்க மாணவர்களோடு கலந்துரையாடலில் கலந்துக் கொள்வார்கள்.

ஒரு வருடம், ஆறு மாதங்கள் இதன் பயிற்சிக் காலம். வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே இந்தப் பயிற்சி நடக்கும். பயிற்சி நடக்கும் இடம் சென்னை. தங்கிக் கொள்ள இடமும் வழங்கப்படும். இது அனைத்துமே இலவசம்தான். என்ன நிறைய தர்க்க ரீதியான விவாதங்களும், வாழ்க்கையை தத்துவ விசாரணைக்கு உட்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். சும்மா போய்தான் பார்ப்போமே என்கிற எண்ணத்தோடு நண்பர்கள் இதில் பங்கேற்க வேண்டாம். சினிமாவின் மீதும், சமூகத்தின் மீதும் பெரிய மரியாதையும், நிறைய Passion உம் இருக்கும் நண்பர்கள் மட்டுமே இதில் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்தப் பயிற்சியில் சேர தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *