பயணி

Spread the love

வீசி எறிந்தால்
விண்மீனாகு
மண்ணில் புதைத்தால்
மண்புழுவாகு

அடித்தால் பொன்னாகு
பிளந்தால் விறகாகு
கிழித்தால் நாராகு

தாக்கும் அம்புகளை
உன் தோட்டக் கொடிகளுக்குக்
கொம்புகளாக்கு

புயலிலும்
பூகம்பத்திலும் தான்
தன் சுழற்சிக்குச்
சுருதி கூட்டுகிறது பூமி

சுற்றிச் சுற்றி எரிகிறது
பொய்த் தீ
பொறாமைத் தீ
தீ..தீ..தீ..

தீயின் வெளிச்சத்தில்
பாதை தெரிவதைக்
கவனி. . .
பயணி. . .

பஞ்சபூதமும் உனக்குள்ளே
பரந்தாமனும் உனக்குள்ளே
பயணி. . .

அமீதாம்மாள்

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 23கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 6