பயன்

சேயோன் யாழ்வேந்தன்

இலைகள் உணவு தயாரிக்கின்றன
இலைகள் உணவாகின்றன
இலைகள் உணவு பரிமாறுகின்றன
இலைகள் எரிபொருளாகின்றன
இலைகள் உரமாகின்றன
இலைகள் நிழல் தருகின்றன
இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன
இலைகள் குடையாகின்றன
இலைகள் கூரையாகின்றன
இலைகள் ஆடையாகின்றன
இலைகள் பாடையாகின்றன
இலைகள் வர்ணங்கள் செய்கின்றன
இலைகள் தோரணாமாகின்றன
இலைகள் எழுதும் மடலாகின்றன
இலைகள் மருந்தாகின்றன
இலைகள் படுக்கையாகின்றன
இலைகள் புகைக்கப்படுகின்றன
இலைகள் போதை தருகின்றன
இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன
இலைகள் மந்திரிகளாக்குகின்றன
இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி
இறுதிவரை சொல்லவே இல்லை
இலைகள் கனிகளை மறைப்பதையும்
கவிதைகள் சமைப்பதையும்
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஉதவிடலாம் !சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி