பாண்டித்துரை கவிதைகள்

Spread the love

பாண்டித்துரை

1.

மேய்ப்பனின் வசைச்சொற்களை
திருப்பிவிடத் தெரியாமல்
மலை முகட்டிற்கு சென்ற ஆடு
கிடை நோக்கித் திரும்புகிறது

2.

என்னைச் சுற்றிலும்
மிதந்துகொண்டிருக்கும்
காற்றில் கலந்துவிட்ட
உனதான சொற்களோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
தீர்ந்தபாடில்லை
உன்மீதான ப்ரியமும்
ப்ரியம் கடந்த உன் வன்மமும்

பாண்டித்துரை

Series Navigation2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு“அவர் அப்படித்தான்”……….( ருத்ரய்யா!)