பாதிக்கிணறு

சேயோன் யாழ்வேந்தன்

சாதி நெருப்பில்
பாதி நெருப்பை அணைத்துவிட்டோம்
மீதி நெருப்புதான் எரிக்கிறது

சாதிக்காற்றில்
பாதிக்காற்றை எரித்துவிட்டோம்
மீதிக்காற்றில் மூச்சுத் திணறுகிறது

சேறும் சகதியுமான
சாதிக்கிணற்றில்
பாதிக்கிணற்றைத் தாண்டியதுதான்
சுதந்தரத்தின் சாதனையோ?
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationஅழைப்புதிருக்குறளில் இல்லறம்