பாலின சமத்துவம்

Spread the love

இல.பிரகாசம்

குறியீடுகள் எல்லாவற்றுக்கும் சூட்டப்படுகின்றன
அவைகள் சமத்துவமானவையா?

சில குறியீடுகள் அஃறினைக்குச் சூட்டப்படுகின்றன
சில குறியீடுகள் உயர்தினைக்குச் சூட்டப்படுகின்றன

குறியீடுகளில் சில
இயல்பிலேயே சமநிலையற்றதாக படைக்கப்படுகின்றன
குறியீடுகளில் சில
இயல்பிலேயே சமநிலைத் தத்துவத்தை போதிக்கின்றன

அஃறினைக் குறியீடுகளில்
அது அவை என்றும்
இது இவை என்றும் சுட்டப்படுகிற போது
பால் பேதங்கள் அவற்றிற்கு சூட்டப்படுவதில்லை முதன்மையாக.

உயர்தினைக் குறியீடுகளில
பால் பேதங்கள் முதனிலை வகிக்கின்றன.
ஆண்குறி என்றும் பெண்குறி என்றும்
திருநங்கை என்றும்
குறிப்பிடும் குறியீடுகளில்
சமத்துவ நிலை
கேள்விக் குறயீடுகளால் சூழ்ந்து காணப்படுகின்றன.

பால்நிலை தத்துவம் சமத்துவ நிலையினின்று
விடுதலை பெற்ற ஒன்றா?
-இல.பிரகாசம்

Series Navigationமறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்அக்கா !