பிஞ்சு உலகம்

Spread the love

முனைவர் டாக்டர் சுபா

 

கண்ணே  எழுந்திரு !கதிரவன் உதித்திட்டான்

கார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார்
அழகாய் நீ கிளம்பிவிடு  ஆசிரியர் காத்திருப்பார் !
அம்மா … இன்று மட்டும் நீ என்னை விடுவாயா
தமிழ் மிஸ்ஸை  நினைத்தால் தடுமாற்றம் வருகிறது
கணிதத்தை நினைத்தால் கண்ணில் நீர் துளிர்க்கிறது
விஞ்ஞானம் என்று சொல்லி விரட்டி அடிக்கின்றார்
சரித்திரம் என்றென்னை சக்கையாய்  பிழிகின்றார்
பொதிமாடு போல் சுமந்து ப்ராஜெக்ட் தனை நினைந்து
மனம் வெதும்பி சாயுதம்மா உன் மடி தேடி வாடுதம்மா !
அன்பு மகளே! நீ அழுதிட கூடாது அரை நாளில திரும்பிடலாம்
ஆசையாய்  நீ கிளம்பு ஆசிரியர் அரவணைப்பார் !
வேண்டாம் அம்மா !வேண்டாம்  வேதனையாய் இருக்கிறது …
இன்று மட்டும் நீ என்னை இங்கேயே இருக்க விடு
இன்று மட்டும் தான்  பெண்ணே நாளை நீ போக வேண்டும்
இடையுறு களைந்திடலாம்  இன்புற்று வாழ்ந்திடலாம்
அம்மா என் அன்பு அம்மா நீ தான் என்  செல்ல அம்மா
பள்ளியிலே ஆசிரியர் பாகுபாடு பார்க்கின்றார்
பாசத்தை காட்டாமல் பரிவோடு நடத்தாமல்
பயம் காட்டி பயம் காட்டி பாடம் நடத்துகிறார்
இன்று என்னை காத்திட்டாய் இன்னருள் புரிந்திட்டாய்
நாளை நான் கிளம்பிடுவேன் நலிந்த இதயதொடே !
முனைவர் டாக்டர் சுபா
Series Navigation