பிடிமானம்

Spread the love

கதவுப்பிடிகளின் மீது
வேகம்
போலி நாசூக்கு தராதரம்
சிலர் மட்டும் காட்டும் உரிமை
அதிகார மைய அறைகளில்

செயலாகப் பசையாக
புழங்கும் வீட்டு வாசற்
கைப்பிடியும் அவ்வாறே.

அது அடிக்கடி
அசையும் அமையும்
சத்தம் அதிகமென்னும்
அலட்டல் பாசாங்கே

கைப்பிடிகளைத் தேடாதவன்
வெறுங்கை வீசி
வேகமாய் நடக்கிறான்
வேற்றுக் கிரகம் நோக்கி

இரவும் பகலும்
சில சமயம் குழம்பியதாய்
அசை போடும் நினைவும்
நிகழும் மயங்குவதாய்
எப்போதோ அசையும்
கைப்பிடியில்
தனக்கேதுமில்லை என்னும்
தெளிவான புரிதலில்
மௌனித்திருப்பார்
இளையோராய் என்றோ
இருந்தோர்

Series Navigation