பிளந்தாயிற்று

Spread the love

நேதாஜிதாசன்

புலம்பிகொண்டே இருக்கும்
நாக்கை அறுத்தாயிற்று
கிறுக்கிக்கொண்டே இருக்கும்
கையை அறுத்தாயிற்று
நடந்து கொண்டே இருக்கும்
காலை வெட்டியாயிற்று
மூச்சு விட்டு கொண்டே இருக்கும்
இதயத்தை பிளந்தாயிற்று.
அமைதியாகவே இருக்கும் மீதியை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

Surya V.N (Nethajidhasan)
Nethajidhasan.blogspot.in

Series Navigationஅறிவியற்பா: பொருண்மையீர்ப்பு அலைகள்!விசாரணை