பிழைப்பு

Spread the love

 
இங்கேயே இருந்துவிடவா
எனக் கேட்கிறேன்
குலதெய்வம் கோயில்
விபூதியை நெற்றியில் இட்டு
ஊதுகிறாய்
வயிற்றுப் பிழைப்புக்காக
வீட்டைப் பிரிகிறேன்
அவள் கழுத்தில் தொங்கும்
மஞ்சள் கயிறு
எனது இயலாமையின் வெளிப்பாடு
பஞ்சத்தில் அடிபட்டது போல்
பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன
நைந்த புடவையின்
முந்தானையால்
கண்ணீரைத் துடைத்து விடுகிறாய்
வெள்ளிக் கொலுசை
காகித பொட்டலத்தில்
மடித்து கைகளில்
திணிக்கிறாய்
வாழ்க்கை கடல்
எங்கு நம்மை கரை சேர்க்கும்
எனத் தெரியாமல்
பேருந்தில்
மொழி தெரியா ஊருக்கு
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமைபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுநீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1