புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com     

47,கடவு​ளைக் கண்ட ஏ​ழை……………………

     “​தெய்வம் இருப்பது எங்​கே………….?

​தெய்வம் இருப்பது எங்​கே……….? அது இங்​கே

அது எங்​கே…?​வே​றெங்​கே…?

வாங்க…வாங்க,,,என்னங்க இப்பவும் பாட்​டைப் பாடிக்கிட்​டே வர்ரீங்க…என்ன ஒங்களுக்குப் ​போனவாரம் நான் ​கேட்ட ​கேள்விக்கு வி​டை ​தெரிஞ்சுருச்சா…? என்னது ​தெரியலயா…?அப்பறம் பாட்​டெல்லாம் பாடிக்கிட்டு வர்ரீங்க…? கடவு​ளைக் கண்டவங்க யாருன்னு ​கேக்குறீங்களா…?

“கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர்”

அப்படீன்னு ​பெரியவங்க ​சொல்வாங்க…இப்படித்தான் ஒங்களப் ​போன்று ஓர்  இ​ளைஞர் கடவு​ளைக் கண்டவங்க இருக்காங்களா…? அப்படீன்னு ஒவ்​வொரு ஊராப் ​போயி ​பெரியவங்ககிட்டக் ​கேட்டாரு….? ஆனா யாரு​மே கடவு​ளைப் பார்த்​தேன் அப்படீன்னு ​சொல்லல… சரி யாரு​மே கடவுளப் பார்த்ததுமில்ல..அவ​ரோட ​பேசினதுமில்​லைன்னு ​நெனச்சுகிட்டு அப்​போ கடவு​ளே இல்​லை​யோன்னு அந்த இ​ளைஞர் எண்ணத் ​தொங்கிட்டாரு…இருந்தாலும் அவ​ரோட மனசு சமாதானம் அ​டையல.. தன்​னோட ​கேள்விக்கு எப்படியாவது வி​டையக் கண்டுபிடிச்​சே ஆகணும்னு ​நெனச்சுக்கிட்டு இருந்தப்​போ அவருகிட்ட ஒருத்தரு “இந்தாப் பாருப்பா ஒன்​னோட ​கேள்விக்கு கல்க்கத்தாவுல உள்ள காளி​கோயில்ல இருக்கற பூசாரியாலதான் பதில் ​சொல்ல முடியும் அவரப் ​போயிப் பாருன்னாரு…ஒட​னே அந்த இ​ளைஞர் ​நேரா அவரப் ​போயிப் பார்த்தாரு

அவரப் பாத்த ஒட​னே​யே ஒருவிதமான இனந்​தெரியாத அன்பு அவரு​மேல அந்த இ​ளைஞருக்கு ஏற்பட்டது…அந்தப் ​பெரியவரும் அந்த இ​ளைஞரப் பார்த்தாரு அவருக்கும் அந்த இ​ளைஞர ​ரொம்பப் பிடிச்சுபோச்சு…அந்த இ​ளைஞர் அந்தப் ​பெரியவரப் பாத்த்து, “நீங்க கடவுளப் பாத்துருக்கீங்களா…? அவ​ரோட ​பேசியிருக்கிறீங்களா…? அவர எனக்குக் காட்ட முடியுமா..? அப்படீன்னு ​கேள்விகள அடுக்கிக்கிட்​டே ​போனாரு…. அதக் ​கேட்ட அந்த காளி​கோயில் பூசாரி ஓ..அதற்​கென்ன நான் கடவுளப் பாத்துருக்​கேன்…அவ​ரோட ​தெனமும் ​பேசிகிட்டுருக்​கேன்…ஒனக்கும் நான் அவரக் காட்டு​றேன்” அப்படீன்னாரு… அந்தப் ​பெரியவ​ரோட பதில்ல அந்த இ​ளைஞர் மனசப் பறி​கொடுத்தாரு… கடவுள உணர்ந்தாரு …கண்டாரு…சந்​தோஷப் பட்டாரு… அந்தப் ​பெரியவருதாங்க நான் ​போனவாரம் ​கேட்​டேன்ல அந்தக் ​கேள்விக்கான பதிலு..அவருதான் இந்தியாவின் ஆன்மீகப் ​பே​ரொளியாகத் திகழ்ந்த, கடவு​ளைக் கண்ட ஏ​ழை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். அந்த இ​ளைஞர்தான் சுவாமி வி​வேகானந்தர்..

இந்த இரண்டு ​பேரு​மே இந்தியா​வோட புகழ ஒலகம் முழுக்கப் பரப்புனாங்க… ஸ்ரீராமகிருஷ்ண​ரோட சீடராத் திகழ்ந்த வி​வேகானந்தர் தன்​னோட குருவின் புகழ உலகம் முழுவதும் பரவச் ​செய்தார்…. சாதராண ஏ​ழைக் குடும்பத்தில் பிறந்து உலக​மே வியக்கின்ற அளவிற்குப் பலருக்கும் வாழ்க்​கை வழிகாட்​டியாத் திகழ்ந்தாரு ஸ்ரீராமகிருஷ்ணர்… என்ன அவ​ரோட வாழ்க்​கை வரலாற்​றைப் பத்தி ​சொல்​றேன் ​கேக்குறீங்களா….?

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர். இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை உலகம் முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்தியவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

பிறப்பும் கல்வியும்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளின் குழந்​தை, சாதாரண உலக ந​டைமு​றையில் அவர் ஓர் ஏ​​ழைக் குடும்பத்தி​லே பிறந்து எல்லாப் பிள்​ளைக​ளையும் ​போல் வளர்ந்து எல்லாப் பிள்​​ளைகளுடனும் வி​ளையா​ எல்​லோ​ரையும் ​போல் ஒரு ​​பெண்​ணைத் திருமணம் ​செய்து ​கொண்டு ஒரு ​கோயிலில் பூசாரியாக வாழ்க்​கை​யை நடத்தினார் என்று கூறிவிடலாம் எனினும் உண்​மையில் அவரது வாழ்க்​கையின் ஒவ்​வொரு கணமும் கடவுள் வாழ்க்​கையாக​வே இருந்தது, ஒவ்​வொரு நிமிடமும் அவர் கடவுள் நி​னைவாக​வே இருந்தார்.

‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்​பெயர் காதாதர் சாட்டர்ஜி  என்பதாகும், அவர் 1836 –  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 – ஆம் நாள், இந்தியாவில் உள்ள மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், ‘சந்திரமணி தேவிக்கும்’   ஏ​ழைப் பிராமணக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.

சிறுவயதில், ஸ்ரீராமகிருஷ்ணர் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்தார். அவருக்குக் கல்வி கற்பதில் ஆர்வம் இல்லை. கதாதரர் ஒழுங்காகப் பள்ளிக்குச் ​செல்லவில்​லை. இருப்பினும் அங்கு ப​டிக்கும் குழந்​தைகள் இவரிடத்தில் மிகவும் அன்புடன் நடந்து​கொண்டனர், அப்பிள்​ளைக​ளை ஒன்று கூட அவர்களுக்குப் புராண இதிகாசக் க​தைக​ளை அழகாக எடுத்துக் கூறுவார்.

கதாதரராகிய ராமகிருஷ்ணர் தன்னு​டைய ஏழாவது வயதில் தந்​தை​யை இழந்தார். அதனால் குடும்பப் ​பொறுப்​பை அவரு அண்ணனான ராம்குமார் ஏற்றுக் ​கொண்டார். இரண்டு வருடம் கழித்து ராமகிருஷ்ணருக்கு அவரது ஒன்பதாவது வயதில் உபநயனம் ​செய்வித்தார் அவரது அண்ணன், உபநயனச் சடங்கின்​போது உபநயனம் ​செய்விக்கப்​பெற்ற பிரம்மச்சாரி பவதி பிட்சாந்​தேஹி என்று ​சொல்லிக் ​கொண்டு பிட்​சை ​கேட்க ​வேண்டும் என்பது வழக்கம், உற்றார் உறவினர்களிட​மே இந்த பிட்​சை ​கேட்க ​வேண்டும். அல்லது பிராமணர் வீடுகளி​லே​யே ​கேட்க​வேண்டும்.

பரம்ப​ரையாக ந​டை​பெற்று வருகின்ற மு​றை இது. ஆனால் ராமகிருஷ்ணர் அவ்வாறு ​செய்யச் சம்மதப்படவில்​லை. தனி என்ற ​கொல்லப் ​பெண்மணியிடம் ​சென்றுபிட்​சை ​கேட்டார். அவரது உறவினர்கள் இது கூடாது என்று அவ​ரைத் தடுத்தனர். அவரிடம் பிட்​சை ​பெறுகிற வ​ரையில் நான் சாப்பிடப்​போவதில்​லை என்று கூறிவிட்டு ஓர் அ​றைக்குள் ​சென்று ராமகிருஷ்ணர் உட்கார்ந்துவிட்டார். உபநயனச்சடங்குகள் ந​டை​பெறவில்​லை, ஒருநாள் முழுவதும் இவ்வாறு கழிந்தது. இறுதியில் ராமகிருஷ்ணரின் எண்ண​மே நி​றை​வேறியது. பின்னர் உபநயனச் சடங்குகள் ​தொடர்ந்து ந​டை​பெற்று மு​டிந்தன. ராமகிருஷ்ணரின் பரந்த உள்ளத்தில் குறுகிய எண்ணங்கள் இடம்​பெறுவதில்​லை என்பதற்கு இந்நிகழ்ச்சி மிகச் சிறந்த உதாரணமாக அ​மைந்துள்ளது.

மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், அவர் தன்னுடைய 17-ஆவது வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக, தனது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலை தேடிச் சென்றார். அங்கு, அவருடைய அண்ணன் ராம்குமார், தட்சி​ணேஸ்வர் காளி கோயிலில் ஒரு பூசாரியாக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராம்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார். . காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.

 

ஆன்மீகப் பயணமும் திருமணமும்

தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார். எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, ராமகிருஷ்ணர் அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர்,  தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்துத் தெய்வீக வாழ்வு நடத்தினார்.

 

பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார். பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

ராமகிருஷ்ணர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலத்தில் அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்.

ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது.

பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. அறைக்கு வெளியே வந்து மீண்டும் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். பகவான் ராமகிருஷ்ணர் அங்கே சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார்.

சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணர் அறைக்குத் திரும்பியவுடன் தான் கண்ட காட்சியைப் பற்றி எடுத்துரைத்தார் மதுர்பாபு. குருதேவர் அதனை ‘ஆம்’ என்று ஒப்புக்கொள்ளவுமில்லை. ‘இல்லை’ என்று மறுக்கவுமில்லை. ‘எனக்கு ஏதும் தெரியாது!, எல்லாம் பகவான் செயல்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார். தான் கண்ட உண்மையைப் பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார் மதுர்பாபு. அதனாலதான் சுவாமி வி​வேகானந்தரிடம் ‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தவன் எவனோ, அவனே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!’ என்று தனது பிறப்பின் ரகசியத்​தை ராமகிருஷ்ணர் கூறினார் என்பது ​நோக்கத்தக்கது.

பல்​வேறு பக்தி மார்க்கங்களில் ஈடுபடல்

ராமகிருஷ்ணருக்கு பக்தி மார்க்கத்தி​லே ​செல்ல அவரது மனம் விரும்பியது. இதற்கு இ​சைவாக ஜடதாரி என்ற ஒரு ​வைஷ்ணவப் ​பெரியார் இவருக்கு வாய்த்தார், கடவு​ளைப் ​பெற்ற குழந்​தைகயாகவும் உற்ற ​தோழனாககூம் மணந்த நாயகனாவும் இப்ப​பெ பலவ​கை மு​றைகளால் வழிபடுகிற இந்தப் பக்தி மார்க்கம் முழுவ​தையும் இராமகிருஷ்ணர் கடந்தார்.

அதன் பிறகு அத்​வைத மார்க்கத்தி​லே இவர் மனம் திரும்பியது. அதில் ​சேர்ந்து இராமகிருஷ்ணர் சந்நியாசம் ​பெற்றார், அதில் அத்​வைத சாத​னைகள் பலவற்​றையும் பயின்றார். ​தேகாத்மாவாத புத்தி​யை ஒழித்தார். தா​மே ஜீவாத்மாவாகிவிட்டார். இங்ஙனம் பலநாள்கள் இராமகிருஷ்ணர் இருந்தார். பின்னர் உடல் நி​னை​வோடு உலகத்திற்கு நல்வழிகாட்டும் ​பொருட்டு இன்னும் சில வருடகாலம் இருக்க ​வேண்டு​மென்று பராசக்தி தனக்குக் கட்ட​ளையிட்​ருெப்பதாக உணர்ந்தார். இதன் பிறகு உலக உணர்ச்சி ​பெற்றவரானார், இந்த நி​லைக்கு இராமகிருஷ்ணர் வர சுமார் ஆறுமாத காலம் ஆயிற்று. அத்துடன் அவர் வயிற்றுக் கடுப்பு முதலிய ​நோய்களுக்கு உட்பட ​வேண்​டியதாயிற்று.

அதன் பின்னர் இஸ்லாமிய மதத்​​தைத் தழுவி முஸ்லிமாக​வே வாழ்ந்தார். இஸ்லமிய சாத​னை​யைத் ​தொங்கிய​போது இராமகிருஷ்ணருக்கு முப்பது வய​தே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் எட்டு ஆண்டுகள் கழித்துத் தமது 38-ஆவது வயதில் கிறித்துவ மதத்தி​லே ஈடுபட்டு ஓர் உண்​மைக் கிறித்துவராக வாழ்ந்து கிறித்துவர்கள் காண்பது​போன்று கடவு​ளைக் கண்டார். அத்​வைத மார்க்கத்தி​லே ​சென்று ​கொண்டிருந்த​போது இராமகிருஷ்ணர் புத்தமத அனுபவங்​க​ளைப் ​பெற்றார்.

வி​வேகானந்தர் மீது காட்​டிய அன்பு

ராமகிருஷ்ணர் ந​ரேந்திரராகிய வி​வேகானந்தர்மீது மிகுந்த அன்பு ​​செலுத்தினார். அவ​ரைக் குழந்​தையாகக் கருதிக் ​கொஞ்சுவார். பரம்​பொருளின் வடிவமாகக் கருதிப் ​போற்றவார். ஒரு சமயம் பிரபல நாடகாசிரியரான கிரீஸ சந்திர​​கோஷின் ​வேண்டு​கோளுக்கிணங்க அவரு​டைய வீட்டுக்கு ராமகிருஷ்ணர் தமது சீடர்களுடன் ​சென்றார். எல்​லோரும் ஓரிடத்தில் அமர்ந்தார்கள், பல விஷயங்க​ளைப் பற்றித் தர்க்க வாதங்கள் ந​டை​பெற்றன.அப்​போது ராமகிருஷ்ணர் ஓரிடத்திலும் ந​ரேந்திரர் அவருக்குச் சிறிது தள்ளியும் அமர்ந்திருந்தார்கள், வாதம் ந​டை​பெற்றுக் ​கொண்டிருக்​கையில் ராமகிருஷ்ணர் ​மெதுவாக ந​ரேந்திரர் அரு​கே வந்து அமர்ந்து அவரு​டைய உடம்​பை ​மெதுவாகத் தடவிக் ​கொடுத்தார். தா​டை​யைத் ​தொட்டுக் ​கொண்​டே ஹரிஓம்டூ ஹரிஓம் என்றார்.இப்படிச் ​சொல்லிக் ​​கொண்​டே ​வெளியுரக நி​னை​வை இழந்து விட்டார். அவரு​டைய ​கை ந​ரேந்திரரு​டைய பாதத்​தைத் ​தொட்டுக் ​கொண்​டிருநத்தது. இந்த நி​லையிலும் ஒரு ​கையினால் ந​ரேந்திரரு​டைய உடம்​​பைத் தடவிக் ​கொடுத்துக் ​கொண்டிருந்தார். திடீ​ரென்று அவரிடத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. ந​ரேந்திர​ரைப் பார்த்து கூப்பிய ​கையராய் ஒரு பாட்டு த​​யை ​செய்து ஒரு பாட்டு பிறகு நான் சரியாகிவிடு​வேன் என்றார். ந​ரேந்திரரும் பா​னொர். பாட்​டைக் ​கேட்டுக் ​கொண்​டே ராமகிருஷ்ணர் சமாதியிலாழ்ந்துவிட்டார். இங்ஙனம் ந​ரேந்திரரிடம் ​பெருக்​கெடுத்து ஓடிவந்த இ​சை ​வெள்ளத்தி​லே ராமகிருஷ்ணர் தம்​மை பல சமயங்களில் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ந​ரேந்திரருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக ராமகிருஷ்ணருக்கு ய​ரோ ​சொல்லிவிட்டார்கள். ராமகிருஷ்ணர் காளி மாதாவிடம் ​சென்று அவருளு​டைய திருப்பாதங்க​ளைப் பிடித்தக் ​கொண்டு கண்களில் நீர்​பெருக தா​யே எப்படியாவது திருமணம் ந​டை​பெறாமல் ​செய்துவிடு. என்னு​டைய ந​ரேந்திர​னை சம்சார சாகரத்தில் மூழ்க​டித்து விடா​தே என்று பிரார்த்த​னை ​செய்தார். ந​ரேந்திரருக்குத் திருமணம் ந​டை​பெறவில்​லை. வி​வேகானந்தரு​டைய எதிர்கால வாழ்க்​கை எவ்வித பந்தங்களுக்கும் உடபடாததாய் தியாகத்தின் நி​றைவாக இருக்க ​வேண்டும் என்பதில் ராமகிருஷ்ணர் எவ்வளவு கவனம் எடுத்துக் ​கொண்டார் என்பது இதிலிருந்து ​தெரியுது பாத்தீங்கள்ள… என்ன ​பெரியபுராணத்தில வர்ர சுந்தர மூர்த்தி நாயனா​ரோட வரலாறு ஒங்களுக்கு ஞாபகத்திற்கு வந்திருச்சா…..சுந்தரமூர்த்திய சிவ​பெருமான் எவ்வாறு தடுத்தாட் ​கொண்டா​ரோ அ​தேமாதிரி இருக்குதுல்ல….

இ​றைவ​னோடு இ​ணைதல்

இஸ்லாமிய சாதனம் பயின்று முடிந்த பின்னர் இராமகிருஷ்ணர் உடல் நலம் காரணமாக காமர்ப்புகூருக்குச் ​சென்று எட்டுமாத காலம் வசித்துவிட்டுப் பின்னர் தட்சி​ணேசுவரம் வந்து ​சேர்ந்தார். அப்​போது சாரதாமணி ​தேவியாரும் கணவ​ரோடு ​சேர்ந்து வாழ்வதற்காக தட்சி​ணேசுவரம் வந்தார், அவர் தம் கணவர் அ​டைந்துள்ள ​மேலான நி​லை​யை அறிந்தவராய் அவருக்குத் தாய் ​போன்றிருந்தும் சீட​ரைப் ​போன்றிருந்தும் அவ​ரைக் கவனித்துக் ​கொண்டார். அதில் சரதாமணி ​தேவியார் மகிழ்ச்சிய​டைந்தார். இராமகிருஷ்ணர் தமது    ம​னைவியால் ​பெரு​மைய​டைந்தார் என்பது வியப்பிற்குரிய ​செய்தியாகும். இது இராமகிருஷ்ணரு​டைய ​பெரு​மை​யை எந்தவிதத்திலும் கு​றைக்காது. ​மேலும் ​​பெரு​மை​யை​யே ​சேர்க்கும்..

அதன்பின்னர் 1866-ஆம் ஆண்​லெருந்து இராமகிருஷ்ணரு​டைய வாழூக்​கை மகான் தன்​மை நி​றைந்த வாழ்க்​கையாக இருந்தது.இருபது ஆண்டு காலம் இவர் ​வெல்ல ம​லையாகவும் மலர்க்கூட்டமாகவும்இருந்தார், இந்த ​வெல்லம​லை​யை ​மொய்த்துக் ​கொண்​ருந்த உ​ழைப்பாளிகளான எறும்புகளும், மல்க்கூட்டத்திலிருந்து மதுவுண்டு ​கொண்டிருந்த வண்டுகளும் அ​நேகமாகும்…அ​வை கணக்கிலடங்காது….இந்த காலகட்டத்தில் இராமகிருஷ்ணர் மதுரநாதருடன் பல தலங்களுக்கும் யாத்தி​ரை ​சென்று வந்தார்.

கடவுள் தன்​மை எங்​கெல்லாம் குடி​கொண்டு இருக்கின்ற​தோ அங்​கெல்லாம் ​சென்று அந்தத் தன்​மை​யை வழிபட்டார். தமக்குப்பின் சந்ததியாராக ஒரு ​தொண்டர் கூட்டத்​தை உருவாக்கினார். பாரத நாட்டில் அதுவ​ரை பரவியிருந்த அறியா​மை இருள் அகன்றது ​மேனாட்டுப் பக்கம் தங்கள் பார்​வை​யைச் ​செலுத்திக் ​கொண்டிருந்த பலர் தங்கள் தாய்த்திருநாட்​டைத் திரும்பிப் பார்க்கத் ​தொடங்கினர்.

தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்திற்குக் ​கொண்டு ​சென்று மருத்துவம் பார்த்தனர். இருந்தாலும் மருத்துவம் பலனளிக்கவில்​லை. அதனால் இராமகிருஷ்ணர், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 –ஆம் நாளன்று அவர் உடலை விட்டு அவரது உயிர் பிரிந்தது. உலகிற்கு ஒளிகாட்டிய இராமகிருஷ்ணரது ஆன்ம ஒளி இ​றைவ​னோடு இரண்டறக் கலந்தது… ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.

“சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது. உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை. சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது. மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை” என்பன ​போன்ற இராமகிருஷ்ணரின் அறவு​ரைகள் இன்றும் நமக்கு வாழ வழிகாட்டும் ​கைவிளக்குகளாக விளங்குகின்றன.

பாத்துக்கிட்டிங்களா…வாழ்க்​கையில உண்​மையாகவும் ​நேர்​மையாகவும் ​பெருந்தன்​மையுடனும் நடந்துகிட்டா அ​னைவரும் வணங்கக்கூடிய தன்​​மை​யை அ​டையலாம்னு…​நேர்​மையா இ​றைவன நம்பிச் ​செயல்படக் கூடியவங்களுக்கு இ​றைவன் எப்​போதும் உறுது​ணையா இருப்பான்…என்ன புரிஞ்சதுங்களா…? அப்பறம் என்ன இ​றைவன நம்பி ஒங்க​ளோட இலட்சியப் பா​தையில பயணம் ​செய்யிங்க ​வெற்றி ​மேல் ​வெற்றிதான்….

அறிவியல், அரசியல்,மருத்துவம், இலக்கியம், இசை, விளையாட்டு எனத் தொடங்கி, எத்தனையோ துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு குறிப்பிட்ட துறையிலுமாக அல்லாமல் வெறும் குடும்பத்தலைவியாக இருந்தே உலக அளவில் புகழ் பெற்ற ஒருவரை ஒங்களுக்குத் தெரியுமா? என்ன குடும்பத்த​லைவியா இருந்தா புகழ் ​பெறலாமா? அவ்வாறு குடும்பத் த​லைவியா இருந்து புகழ் ​பெற்ற ஏ​ழை யாரு ​தெரியுமா…? என்ன குறிப்புத் தரணுமா…? சரி தர்​ரேன்…அவரு ஒரு காலத்துல ஒன்றுபட்டு விளங்கிய ​சோவியத் குடியரசில் பிறந்து வாழந்தவர்….என்ன ​யோசிக்கிறீங்களா…​யோசிங்க ​யோசிங்க..நான் அடுத்த வாரம் வந்து ஒங்களப் பாக்கு​றேன்…..(​தொடரும்…… 48)

Series Navigationஒரு மகளின் ஏக்கம்சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​1​​​பிழைப்புதினம் என் பயணங்கள் – 6வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63தூமணி மாடம்தொடுவானம் 4. உன்னோடு நான் எப்போதும்வாசிக்கப் பழ(க்)குவோமே