புதிய கட்டளைகளின் பட்டியல்..

Spread the love

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை
உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை
எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய்

நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது
ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ
புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை
வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய்

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
நானும்
பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு
சிலந்தியும்
வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்

*******
–இளங்கோ

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 47தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்