புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்

 

ஆசிரியர் குழுவினர்க்கு அன்பான வணக்கம்.

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் வழக்கம்போல் சிறந்த நூல்களுக்கான விருதுகள் மட்டுமின்றி, இணைய இதழில் வெளிவந்து, நூலாக்கம் பெறாத படைப்புகளுக்கும் விருது தர முடிவுசெய்யப்பட்டுள்ளது

எனவே, தங்கள் இதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டு நல்ல படைப்பாளிகள் விருது பெற உதவும்படி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

நன்றியும் வணக்கமும்.

அன்புடன்,

நா.முத்துநிலவன்,

ஒருங்கிணைப்புக் குழு,

5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா,

புதுக்கோட்டை – 622001 

22-6-2022 

———————————————————————

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022
இலக்கிய விருதுகள்– அறிவிப்பு
———————————————————————
           புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல்
இயக்கமும்  இணைந்து மாவட்ட ஆட்சியர் அவர்களைத் தலைவராகக் கொண்டு நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா-2022
எதிர்வரும் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது. அதில் 2020,2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழில் வெளியான சிறந்த நூல்கள் மற்றும் இணையத்தில் வெளியான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அவ்விருதுகள் கீழ்கண்ட பிரிவுகளில் வழங்கப்படும்.
;
கவிதை நூல்: —ஒரு மரபுக்கவிதை நூல், ஒரு புதுக்கவிதை நூல் ,  ஒரு ஹைக்கூ நூல் என மூன்று விருதுகள்
கட்டுரை நூல் :– அரசியல் சமூகம், வரலாறு , அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்கும் ,கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரை நூல் ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள்
சிறுகதை நூல் :– அசல் சிறுகதை நூல் ஒன்றிற்கான விருது
நாவல் நூல் : — அசல் நாவல் நூல் ஒன்றிற்கான விருது
சிறார் நூல் :– சிறந்த சிறார் இலக்கிய நூல் ஒன்றிற்கான விருது
இணைய இலக்கியம் :– இணையத்தில் மட்டும் வெளியாகி நூலாக வெளிவராத தமிழ் படைப்பாளர்களின் புனைவுப்படைப்பு (கதை, கவிதை )ஒன்றிற்கும், அபுனைவுப் படைப்பு (கட்டுரை) ஒன்றிற்குமாக இரண்டு விருதுகள் என ஆக மொத்தம் பத்து விருதுகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு விருதுக்கும்  எழுத்தாளர்க்கு ரூ 5000 பரிசுத்
தொகை , சான்றிதழ்,  விருதுப் பட்டயம் ஆகியன வழங்கப்படும்.
மேற்படி விருதுகளுக்கான பரிசீலனைக்கு பதிப்பகத்தார் ,படைப்பாளிகள் ,
மற்றும் வாசகர்கள்  தங்கள் நூல்களையும் தாங்கள் பரிந்துரைக்கும்
நூல்களையும் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல்கள் அனுப்புவோர் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். .

இணையப் படைப்புகளின்  இணைப்பினை( LINK ) கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்பக் கடைசி நாள் 12.07.2022.


அனுப்ப வேண்டிய முகவரி

ராசி.பன்னீர்செல்வன்
தலைவர், தேர்வுக்குழு
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை -620 001
தொடர்புக்கு 9486752525
மின்னஞ்சல்
rasipanneerselvan@gmail.com

Series Navigationசாம்பல் கவிதைகள்