புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

Spread the love

நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 – 8.00 மணி
இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001

சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பெருங்கதை, இலக்கண நூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, கல்லாடம், பக்திப் பனுவல்களான திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் ஆகிய நூல்களுக்கு அரும்புலமை நலம் தழைக்க உரை வரைந்தும், படைப்பு நூல்கள் பலவற்றைப் படைத்தும் தமிழ்ப்பணியாற்றிய தமிழ்ச்சான்றோர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார்(05.09.1909-03.01.1972) அவர்களின் பிறந்தநாள் விழாவும் படத்திறப்பு நிகழ்ச்சியும் சிறப்புற நடைபெற உள்ளன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை : முனைவர் கோ.விசயவேணுகோபால் அவர்கள் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).

முன்னிலை: புலவர் இ. திருநாவலன் அவர்கள் புலவர் நாகி அவர்கள்

வரவேற்புரை : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

பெருமழைப்புலவரின் படத் திறப்பு: முனைவர் ழான் லூய்க் செவ்வியார் (பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வுப்பள்ளி (EFEO).

சிறப்புரை : தமிழ்க்கடல் இரா.இளங்குமரனார் அவர்கள்
(நிறுவுநர், திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர், திருச்சிராப்பள்ளி)

நன்றியுரை : முனைவர் ஆ.மணி அவர்கள்


முனைவர் மு.இளங்கோவன்

Series Navigationஎது சிரிப்பு? என் சிரிப்பா ?பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….