புத்தகங்கள்

Spread the love

     

   ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

புத்தகமொன்றைக்

கையில் ஏந்துகையில்

அந்த எழுத்தாளர்

நண்பனாகிறார்

புதிய இனிய சூழலில்

வாசகர் நிறுத்தப்படுகிறார்

புத்தகங்களின் பல சொற்கள்

அறிவூட்டும்

தாயின் கரங்களாக மாறுகின்றன

அவை மன இருளை

அள்ளி அள்ளிக் குடிக்க

திறக்கிறது ஞானவாயில்

அழகிய பூக்களின்

இனிய மணம்

நாசி நிரப்புவதுபோல்

வாழ்க்கை

அறிவு வெளிச்சத்தில்

இனிதாய் நகர்கிறது

அனுபவங்கள் படைப்பிற்கு

கதவு திறக்கின்றன

சாதாரண மனிதனாய்ப் பிறந்து

கலைஞர்

ஆகிறார் வாசகர்

Series Navigationகோவிட் 19கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?