புரிந்தால் சொல்வீர்களா?

சக்தி சக்திதாசன்

எனக்குள்ளே
என்னைப் பரப்பி
அதற்குள்ளே
அதனைத் தேடி
எதற்காக இத்தனை
ஏக்கம்?
விடைகாணா
வினாக்களின் முழக்கம்

நினவாலே இசைத்திடும்
சங்கீதம்
கனவோடு கலந்திடும்
சிலநேரம்
முடிவோடு தொடக்கம்
முடியாமல்
ப்கலோடு இரவாகத்
தெரியாமல்
இது என்ன மாற்றம்?
இதுதானா சீற்றம் ?

தெரியாத ஊருக்கு ஏனோ
புரியாத பயணம்
புலராத் பொழுதொன்றில்
முடியாத கனவு
சுகமான சுமைகளை
சுமந்திடும் தோள்கள்
கனக்கின்ற எடைகளை
களைகின்ற மேடை
சொல்லொன்று தீட்டிய
ஓவியத்தை
கண்ணில்லா மனிதனிடம்
காட்டிய நேரம்

Series Navigationபொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம்