புரியாத மனிதர்கள்….

Spread the love
வாணமதி
கொடியநோயில்
கொடுரமான மரணத்தை
மனமார இரசித்தேன்
இறப்பென்பது உன்றெண்டு
உணர்த்திய நிமிடம்
உறவென்ற உயிர்கள்
எட்டவே எட்டிப்போக
எப்படிச்சொல்வேன்
எந்தன்வலியை?
நிஜமென்ற யாவும்
நிஜமல்லவென்று நிமிடங்கள்
நிஜமாக்கியபோது…
உதிர்ந்த முடியும்
ஒட்டியகண்ணமும்
கறுத்ததேகமும்
எலும்போடியைந்த தசையும்
மருந்தின் நெடியும்
இரத்தமும் சதையுமான
வலியும்
எங்கேயோ இருக்கும்
எமனை என்னருகில்
காவல்வைத்த நொடியும்
கண்களில் நிழலாடுது
மனதுக்குள் மகுடமாக
நான்வளர்த்த உறுதி
எட்டவே செய்தது
எட்டியவந்த எமனையும்
அறுத்த சதைகளை
அஞ்சாது பார்த்து
ஆடியோடிய வாழ்வை
அசைக்கவைத்த சதியோ!
அஞ்சாதபெண்ணாய்
ஆயுளுக்கும் வாழ்வேனென
ஆத்மாவின்ஒலியால் அறைகூவினேன்
காலவோட்டத்தில்
காலனையும் வென்ற காரிகையாக
கண்விழித்தேன்
சினிமாப்பாணியில்
நான்சொன்ன செய்தி
சிலபுரியாத மனிதர்களுக்கு
கதை!
புரிந்தவர்களுக்கு புரியும்
       அதுதான் புற்றுநோய்!
Series Navigationஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதைகுரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு