புறமுகம்.

Spread the love

என்றுமே தோன்றிடாத
பல புன்னகையை
இன்று இக்கணம்
சுமக்கிறேன் .

இது எவ்வளவு
மிகைமை
உடையவையாக
இருந்தும் இன்னுமும்
சிரிக்கப்படுகிறது.

மீண்டுமொரு தடவை
இந்த நிகழ்வு வராமல்
போகவும் கூடும்
அதன் பொருட்டே
ஏற்று கொள்கிறது
புறமுகம்.

புன்னகையின் சிதறல்
வெளியே செல்லாமல்
இருக்குமாறு
கவனமாக்குகிறது.

அவையும் மீறிய
சிதறிய துளி
வெள்ளமென பாய்கிறது
எந்நிலை உடையவர்கள்
பிரதியை போல
பொய்மை கொண்டு
மேலும் மேலும் பொழிவை
கூட்டுகின்றனர்.
-வளத்தூர் .தி.ராஜேஷ் .

Series Navigationசமன் விதிபுழுக்கம்