புலம்பல்கள்

Spread the love

உன் தவறுகளைக்

குழி தோண்டிப் புதைத்துவிட்டு

அவற்றின் மேல்

கம்பீரமாக நின்று பேசுகிறாய்

உன் கற்பனைகளுக்கு

முலாம் பூசிக்

குற்றச்சாட்டுகளென

என்னைச் சுற்றி

வேலி கட்டுகிறாய்

கயிற்றைப் பாம்பென்று

சொல்லிச் சொல்லி

மாய்ந்து போகிறாய் நீ

காது தாண்டிய உன் வாய்

அறியாமையை முழக்கியும்

நீ ஓய்ந்தபாடில்லை

யூகங்களின்

பரந்த வெளியில் நின்று

நீ தாண்டவமாடுகிறாய்

அபாண்டத்தை முன் வைக்கும்

உன் புலம்பல்களே

உனக்குத் தண்டனையாகிறது

          ++++++++

Series Navigationகாலப்பயணமும் , காலமென்னும் புதிரும்