புள்ளி கோலங்கள்

என்னை சுற்றி

அடுக்கு அடுக்காய்

வரிசை கிரமத்தில்

புள்ளிகள்.

 

 

கோலம் துவங்கும் நேரத்தில்

புள்ளிகள் நகர்கின்றன..

மத்திய புள்ளியாகிய நானும்

அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு

கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி

கோல பலகையிலிருந்து

விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து

மீண்டும் நேர்வாட்டில்

குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என

நகர்ந்து கொண்டே இருக்கிறேன் ..

 

 

நகர்கிற புள்ளிகளில்

கோலமாவது ,ஒண்ணாவது?

அசந்து விட்ட நேரத்தில்

புரிந்தது –

 

 

புள்ளிகள் நகர்கையில்

மாறி மாறி

உருவம் எடுக்கும்

வடிவங்களே

அழகான  கோலங்கள் என்று.

 

 

– சித்ரா (k_chithra@yahoo.com)

 

Series Navigationஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)