பூமிக்கு போர்வையென

Spread the love

ம.தேவகி

பூமிக்கு போர்வையென
நீ அளித்த புல்வெளியில்
எப்பொழுதும் மகிழ்ந்தாட – உன்னை
பிரியாத வரம் வேண்டும் என்றேன் நீ வழங்கினாய்
வரம் கொடுத்தவன் தலையில் கை வைக்க துவங்கினோம் நாம்
புல்வெளியில் என் ஸ்பரிசம் பட்டவுடன்
தாய்மடியின் சுகம் உனர்ந்தேன்
உனக்கும் அந்நிலைதானே
உணர்ச்சி பிரவாகத்தில் கண்ணீர் சொரிகிண்றாயே
பனித்துளியாக! இப்பனித்துளிக் கண்ணீரை
அவலக்கண்ணீராக்கிக் கொண்டுல்ளோம் நாம்
அயல் நாடுகளை கவர்ந்த அந்நாட்டு
மன்னர்கள விஷ விதைகளை விதைத்தனர்
ஆனால் இன்றோ!
தெரிந்தே பயன்படுதுகின்றோம்
மானிடர்களே உங்களிடம் ஒரு கேள்வி
மலடான தாய்மார்களுக்கு பிரப்பார்களா
குழந்தைகள்! நீ இயர்கையை
புதைகுழிக்குள் அனுப்ப வில்லை
உனக்கு நீயே தோண்டுகிறாய்
சாவக்குழியை! நீ அவல்தான் மடியை
கருவறையை யாக்க வேண்டாம்
கல்லறையக்காமல் இருக்க சபதம் எடுப்போம்
வீரிய விதைகளை!
என் அன்னை முலையிலிருந்து சுரக்கும்
அருவி நீரைஇ ஆறுகளைஇ குளம் குட்டைகளை
சாமேற்றுகிறோம் சாயத்தொழிற்சாலைகளால்
அன்னையின் உய்ர்ப்பாலிலும் விடமா!
கலங்குகிறாள் நடுங்குகிறாள் என் அன்னை
ஒய்யாரமாக நாம் வாகனத்தில்
சென்று ஓயாமல் வீசும்
அன்னையின் மூச்சுக்கற்றான
நாம் சுவாசக்காற்றையும் அசுத்தமாக்கிவிட்டோம்
இதுமட்டுமா
மரங்களை அழித்தோம்
நெகிழியை பயன்படுத்தினோம்
தொடர்ந்து நாம் சுகமாக இருக்க
நம்மை குளிர்விக்க
பொருட்களை குளிர்விக்க
துவைக்கஇ அரைக்கஇ பெருக்க
இதனால்
அன்னையை வாழ வைக்கும்
ஓசோன் படலத்திலும் ஓட்டையிட்டோம்

ம..தேவகி
தமிழ்த்துறை தலைவர்
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி

Series Navigationஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்காந்தி கிருஷ்ணா