பூமியைப் பிழிவோம்

Spread the love

பட்டனை அமுக்கு

பற்றி எரியும் இலக்கு

எண்ணெய் வேண்டாம் எரிக்க

தண்ணீரே போதும்

இதயமோ ஈரலோ

இல்லாமலே வாழ்வோம்

வயசுக்கணக்கு இனி

விதியிடம் இல்லை

முதுமை பறிப்போம்

இளமை நடுவோம்

ரத்தம் செய்ய

எந்திரம் செய்வோம்

மழை வேண்டுமா?

தருவோம்

கருக்கள் வளர்க்க

இனி கருப்பை வேண்டாம்

உணவுகள் இன்றியே

உயிர் வாழ்வோம்

ஆக்குவோம்

அழிப்போம்

பூமியைப் பிழிவோம்

இவனுக்கென்ன

பைத்தியமா?’

அமைதியாய்க் கேட்டது

‘கொரோனா’ வைரஸ்

அமீதாம்மாள்

Series Navigationகுடித்தனம்வயதாகிவிட்டது