பூமி தொழும்

Spread the love

 

 

 

பறந்த வெளி

பச்சைத் தீ

 

மிதித்தால் நிமிரும்

ஒடித்தால் துளிரும்

 

உடம்பே விதை

தொடரும் கதை

 

ஆயுள் கணக்கில்லை

தேடல்கள் மிகையில்லை

 

மூங்கில் தானியம்

சகோதரம்

 

தர்மத்தின் தாய்

இயற்கையின் சேய்

 

நான்கு பருவமும்

நண்பர்கள்

 

 

ஒற்றுமை வாழ்க்கை

குடும்பம் கொள்கை

 

தாவரவிரும்பியின்

தாய்ப்பால்

 

கருஉயிர் நீவும்

காற்றைக் கழுவும்

 

புழுக்களின் பருக்கை

பனிமுத்தின் இருக்கை

 

மூலிகையும் தரும்

காகிதமும் தரும்

 

வண்ணம் அன்பு  

வடிவம் அருள்

 

வளியின் ஒளியின்

மூத்த முதல் உயிர்

 

விழிகளைக் கழுவும்

வெட்டவெளிகள்

 

வாழ்வியல் தத்துவம்

பேசும் தாவரம்

 

பார்த்தால் போதும்

பறவையாகும் மனம்

 

புரிந்துகொள்வோம்

புற்கள் போதிமரங்கள்

 

புல்லாய் இரு போதும்

பூமி தொழும்

 

அமீதாம்மாள்

 

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 274 ஆம் இதழ்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]