பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…

பேசாமொழி 19வது இதழ் வெளிவந்துவிட்டது…

இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html

நண்பர்களே, மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளியாகும் இணைய மாதமிருமுறை இதழான பேசாமொழியின் 19வது இதழ் இன்று (02-08-2014) வெளியாகிவிட்டது. காட்சியியல் சார்ந்தும், ஒன்றை பார்க்கும் முறை சார்ந்தும், மிக நுட்பமான பார்வையைக் கொண்டிருக்கும் ஜான் பெர்ஜரின் “வேஸ் ஆப் சீயிங்”, தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிகொண்டிருக்கிறது. தவிர, ஒளிப்பதிவு தொடர்பான உலகின் மிக முக்கியமான புத்தகமான ஷாட் பை ஷாட் மொழியாக்கமும் இந்த இதழில் தொடர்கிறது. இந்த இரண்டு முக்கியமான மொழியாக்க தொடர்களுடன், வெர்னர் ஹெர்சாக்கின் உரையாடல் ஒன்றும், கோணங்கள் எஸ். ஆனந்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு தொடராக வெளியாகிக்கொண்டிருக்கிறது. சினிமாவின் இன்னொரு பரிமாணத்தை, இந்த நேர்காணல் மூலம் நண்பர்கள் அறிந்துக்கொள்ளலாம். பிலிம் நியூஸ் ஆனந்தனின் அனுபவங்களும் தொடராக வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html

இந்த தொடர்களோடு, இந்த மாத பேசாமொழி இதழில் 

வெளியாகியிருக்கும் கட்டுரைகள்:

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் – 6 – பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்

திரைமொழி – ராஜேஷ்

காணும் முறைகள் – ஜான் பெர்ஜர் – தமிழில்: யுகேந்தர்

விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் – தினேஷ் குமார்

சினிமாவும் இலக்கியமும் – சு. தியடோர் பாஸ்கரன் – ஒலிப்பதிவு & தட்டச்சு: யுகேந்தர்

அகிரா – வருணன்

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை – தம்பிஐயா தேவதாஸ்

இந்திய சினிமா வரலாறு – பி.கே.நாயர்

உலக சினிமா சாதனையாளர்கள் – ஃபெட்ரிக்கோ ஃபெலினி

தமிழ்ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – தினேஷ் குமார்

இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_19.html

குறிப்பு: பேசாமொழி இதழ் இணையத்தில் வெளியாகிறது. முழுக்க முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்கலாம். பேசாமொழி இதழ் அச்சில் வெளிவரவில்லை)
 
அடுத்த இதழ் முதல் சாரு நிவேதிதா எழுதும் புதிய தொடர் பேசாமொழியில் வெளியாகவிருக்கிறது.

நண்பர்களே, சாரு நிவேதிதா பல வருடங்களுக்கு முன்னர் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய ஒரு சிறு புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். உலகில் மிக முக்கியமான சினிமாக்கள் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவானவை. காத்திரமணா அரசியல், இருண்ட பக்கங்களின் துயர் தோய்ந்த வாழ்க்கை, அருமையான சினிமா வடிவம் என லத்தீன் அமெரிக்க சினிமாக்கள், திரைப்பட ஆர்வலர்களை, அவர்களது ரசனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை பெற்ற ஒன்று. அத்தகைய லத்தீன் அமெரிக்க சினிமாக்கள் பற்றி சாரு நிவேதிதா, பேசாமொழி இதழில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் எழுதவிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த புதிய தொடருக்கு நண்பர்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தமிழின் வணிக சினிமாவோடு எத்தகைய சமரசமும் செய்துக்கொள்ளாமல், உலக சினிமாக்களை தமிழ் திரைப்பட ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்ததில் சாரு நிவேதிதாவின் பங்கு அளப்பரியது. சாரு நிவேதிதாவின் இந்த புதிய தொடர், உலக சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக அரசியல் சினிமா ரசிகர்களுக்கு புதிய களமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.பேசாமொழி ஆசிரியர் குழு.


Series Navigation