பேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….

கோவிந்த் கோச்சா:

பரபரப்பான திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் வரும் வழி நடைபாதை.
ஹீயுண்டாய் கார் ஷோ ரூம் களைகட்டிய சூழல் , ஐடி யுவன் யுவதிகள் நடந்து, காரில், பைக்கில் செல்லும் இடம்.
அமெரிக்க வருமானத்தை மேட்ச் செய்து வேலை பார்ப்போர், விமானங்களில் பறந்து பறந்து கன்சல்டன்சி தருவோர் என உலக பொருளாதார சூழல் மனிதர்கள் சர்வசாதாரணமாக வந்து போகும் வழியில் இதோ ஒரு பாரம்பரிய தமிழ்க் குடும்பம் சாலையோர நடைபாதையே வீடாக, பின்னே கைகுழந்தை விளையாட, இந்த தழிழ்ப் பெண், நடைபாதையின் மூலையில் இருந்த ஒரு ஓட்டையில் தங்களது இரவு உணவிற்கான ஸ்பெஷன் ஐட்டத்திற்கு வேட்டையாடுகிறார்…
ஒரே ஒரு தூண்டில் மட்டுமல்ல…… அசாத்திய பொறுமையுடன் அவர் நடத்தும் அற்புத வேட்டை….
கீழே படங்கள்….
ஆக்‌ஷனில் பார்க்க யூ டியூப் லிங்கை கிளிக்குங்கள்….

மெதுவாய், பொறுமையாய் ஒட்டையில் முனையில் சுருக்குக் கயிறு மாட்டிய குச்சியை விட்டபடி….

தனது இரையைப் பிடிக்க அதற்கு ஒரு இரை… ஐ.டியில் தரும் எப்போதும் எட்டாத இன்செண்டிவ் போல….

இந்த சோறு எடுத்து அந்த குழியில் முன்னோரம் போட… உள்சாக்கடையிலிருந்து அதை தின்ன வெளி வரும் அந்த “இரையை” தூண்டில் சுருக்கால் லாவகமாக பிடிக்கும் முயற்சியில்… இப் பெண்மணி…

தோ…. புடிச்சாச்சு… இன்னிக்கு டின்னரில் ”எலி 2011” ( அதாங்க சிக்கன் 64 போல.. ) தான்…

லைவ் ஆக்‌ஷனில் பார்க்க….

Series Navigationபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்கதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்