பேய்

ஸ்ரீராம்

பேய்கள் உலவும் வளைவு
என்று சொல்லப்பட்ட இடத்தில்
திடுமென
கார் நின்றுவிட்டது…

நாங்கள் எல்லோரும் பயந்துபோயிருக்க‌
உறக்கத்திலிருந்து விழித்த ஜானவிக்குட்டி
சற்று நகர்ந்து அமர்ந்துவிட்டு
‘பேய் வந்தா இங்க உக்காரட்டும்’ என்கிறாள்…

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழாஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்