பொம்மலாட்டம்

கவிஞன் என்ற

அடையாளத்திற்காக

வளர்த்த குறுந்தாடி…….

 

பக்கத்திற்கு பக்கம்

பதிய வைக்க

அழகிய புகைப்படம்………

 

சுயமாய் அச்சடித்து

தொகுப்பாய் கொடுக்க

தேவையான பணம்…..

 

எல்லாவற்றையும்

வசப்படுத்திய பின்பும்

ஏனோ

வசப்பட மறுக்கிறது

கவிதை மட்டும்….!

 

மு.கோபி சரபோஜி.

Series Navigationசரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4கிளைகளின் கதை