மனிதனின் மனமாற்றம்

Spread the love

 

 

செ. நாகேஸ்வரி

 

உலகம் தோன்றிய நாள் முதல்…..

மண்ணோ தன் வாசம் மாற்றவில்லை

மலையோ இடம் பெயர்ந்து போவதில்லை

விண்ணோ வீட்டில் இடம் கேட்பதில்லை

வீசும் தென்றலும் இங்கே சுடுவதில்லை

நெருப்போ சுடுதலை மறக்கவில்லை

சூரியன் ஓய்வும் எடுப்பதில்லை

மாரியும் தன்னை மரித்ததில்லை

பூமியும் சுற்றி வர சுணங்கவில்லை

நிலவும் தன் நிறத்தை மாற்றவில்லை

அலையோ அணுதினமும் ஓய்வதில்லை

இரவோ எப்பொழுதும் தொடர்வதில்லை

பகலோ நெடுநாள் நீள்வதில்லை

பாலோ தன் நிறத்தை மாற்றவில்லை

பூக்கள் மணத்தை பொய்ப்பதில்லை

பழங்கள் தன் சுவையை விடுப்பதில்லை

புள்ளிமான் நிறத்தை உதிர்ப்பதில்லை

காக்கை ஒற்றுமையை தகர்க்கவில்லை

கருநாகம் படமெடுத்தலை மறந்ததில்லை

எறும்போ சுறுசுறுப்பை மறக்கவில்லை

கரும்போ கசப்பாய் காண்பதில்லை

சங்கோ சுட்டாலும் நிறம் மாறுவதில்லை

சில்வண்டோ சிணுங்குவதை நிறுத்துவதில்லை

விலங்கோ வீதியில் யாசகம் கேட்பதில்லை

ஆனால் மனிதன்…..

—————————-

செ. நாகேஸ்வரி

கெடார்

Series Navigationநம்பிக்கையே நகர்த்துகிறதுஎன் காதலி ஒரு கண்ணகி