மனித நேயர்

தொழுகைத் தொப்பி
புனிதநூல் பிரதி
பேரரசன் உடுப்பிற்கும்
உணவிற்கும்
நெய்தபடி இருந்தார்.

மலை எலிகளை
விரிந்த நாகங்களை
விக்கிரங்களை உடைத்து
பள்ளிகளை
எழுப்பினார்.

டாரா ஷிக்கோ
புறச்சமயியானான்,
அவனோடு ஷூஜா, முராட்,
சர்மட்டை சிதைத்தார்
வாழும் புனிதர்.

மதமெனும்
மதுவில் மூழ்கியவர்
வீராபாயையும்
இழந்தார் தந்தையின்
அன்பையும்.

தீன் இலாஹியோடு
கிளைத்தார்,
டாரா ஷிக்கோவின்
வழித்தோன்றலாய்
மனித நேயர்.

— நன்றி குஷ்வந்த்சிங்கின் ஔரங்கஷீப் ஆலம்கீர் ஹிந்துஸ்தான் பேரரசர்.

Series Navigationமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்