மறதி

Spread the love

அட மழை

அவசர வேலை

‘க்ராப்’ ஐ அழைத்தேன்

வந்தார். சென்றேன்

சேருமிடம் சேர்ந்தேன்

சேர்ந்ததும்தான் புரிந்தது

காசுப்பையும் மறந்தேன்

கைப்பேசியும் மறந்தேன்

காசு தருவ தெப்படி?

காகிதம் ஒன்றில்

கைப்பேசி எண் எழுதி

ஓட்டுநர் தந்தார்

பின் சொன்னார்

‘பேநௌ’ வில் அனுப்பு

பிரச்சினை இல்லை’

அய்யய்யோ!!

அந்தக் காகிதத்தை

எங்கே வைத்தேன்?

அமீதாம்மாள்

Series Navigationஅதிசயங்கள்ப.ப.பா