மறந்து போன சேலையும்-மறக்கடிக்கப்பட்ட தலைப்பாகையும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 11 of 32 in the series 29 மார்ச் 2015

வைகை அனிஷ்

திண்டுக்கல் என்றாலே நினைவுக்கு வருவது ப+ட்டு தான். ஆனால் பிரியாணிக்கும் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ்பெற்ற பிரியாணிக்கடைகளுக்கு டிரேட் மார்க் ஆக தலைப்பாக்கட்டி என பெயர் வைத்துள்ளர்கள. அதன்பின்னர் தலைப்பாக்கட்டு, தலைப்பாக்கட்டி, இராவுத்தர் தலைப்பாக்கெட்டு பிரியாணி எனப்பெயர் வைத்து தலைப்பாகையை டிரேட் மார்க் ஆக வைத்திருப்பார்கள். தலைப்பாகைக்கும் பிரியாணிக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இருப்பினும் தலைப்பாக்கட்டு என்ற பெயருக்காக நீதிமன்றத்தில் வழக்கு கூட நடந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை தலைப்பாகை என்பது உயர்ந்த குடி மக்கள் மட்டுமே அணியும் ஒன்றாக இருந்தது. தலைப்பாகை என்பது தலையில் கட்டும் துணியைக் குறிக்கும். இந்தத்துணி ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒவ்வொரு வண்ணங்கள் இருக்கும். தலையில் தலைப்பாகை அணிந்து கொள்பவர்கள் தங்களை உயர்ந்த சாதி என்பதாகவும் உயர்ந்தோர் எனக் காட்டிக்கொள்வதற்கான ஓர் அடையாளமாக இருந்துள்ளது. தலையை மறைக்கும் தலைப்பாகை மதங்கள் சார்ந்த ஒழுக்க நெறிகளாகவும் பின்னர் மாற்றப்பட்டது.
கி.பி.18-19 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கால கட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் துணி கட்ட அனுமதியில்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் அல்லது ஆண்கள் தலையில் பாரத்தை வைத்து கொண்டு செல்லும்போது பாரமானது தலையில் அழுத்தாமல் இருக்க துணி அல்லது வைக்கோலால் சுருட்டி வைத்திருப்பார்கள். அதனை சும்மாடு என அழைப்பார்கள். அவ்வாறு சும்மாடு தங்கள் தலையில் வைக்க கூட உரிமையில்லாமல் இருந்தது. மேலும் இடுப்புக்கு மேலோ, முட்டுக்கு கீழோ ஆடைய அணிய உரிமை மறுக்கப்பட்டு அரை நிர்வானமாக நடமாடினார்கள் இந்தத்த தலைப்பாகை இந்தியாவில் உள்ள கோயில்கள் இரண்டு பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் நுழையும் போது தலையில் துணியைக் கட்டிக்கொள்ளவோ தலையை துணியால் மூடவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதே வேளையில் வடஇந்தியாவில் உள்ள கோயில்களில் ஆண்களும், பெண்களும் தலையில் தலைப்பாகை அணிந்துதான் செல்லவேண்டும்.
வடஇந்தியப் பெண்கள் குஜராத், காஷ்மீர், மிசோராம் போன்ற பகுதிகளில் இந்துப்பெண்கள் மரியாதைக்குரிய பெரியவர்களைக் காணும்போது தலையை மூடிக்கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது.மேலும் இந்துமதக் கோவில்களில் ஆண்களும், பெண்களும் தலையை துணியால் மூடிக்கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள்.
சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் தலைப்பாகை அணிவது கட்டாயமாக உள்ளது. பள்ளிவாசல்களில் நடத்தப்பெறும் 5 வேளைத்தொழுகை நடத்தும் உலமாக்கள் அதாவது மத குரு தலையில் தலைப்பாகை அணிந்துகொண்டு தான் தொழுகை நடத்துவார். இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை, ரம்ஜான், பக்ரீத் தொழுகையின்போது தலைப்பாகைக்கு பதிலாக தொப்பியை அணிந்து தொழுவது மதஅடையாளத்தின் சின்னமாக கருதி வருகிறார்கள். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக மரைக்காயர்கள் அச்சைத்தொப்பி என்ற ஒருவகைத் தொப்பியை அணிந்திருந்தனர். இத்தொப்பிகள் அச்சை என்ற ஊரில் தயாரிக்கப்பட்டவை. இந்த தொப்பி பட்டுத்துணியால் செய்யப்பட்டவை என்றும் அத்தொப்பியின் மையத்தில் பவுன் தகட்டைப் பட்டையாக அடித்து அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இத்தொப்பிகளை மரைக்காயர் தொப்பிகள் என்று அழைக்கப்பட்டது. இதே போல வட்டவடிவிலான தொப்பியும் அதன் நடுவில் குடுமி போல கருப்புநூல்களை கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அதனை துருக்கி தொப்பி என்று அழைப்பார்கள்.தற்பொழுது உலகம் முழுவதும் ஏகத்துவம்; வளர்ந்து வந்த பின்பு தலைப்பாகை அணிவதோ, தொப்பி வைப்பது கூட மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதே போல இஸ்லாமிய பெண்கள் பர்தா என்ற கருப்பு வகை அங்கியை அணிகின்றனர். புர்கா அணிவதைப்பற்றி முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனில் 24:31 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் முகம், இரு கைகள் ஆகியவற்றைத்தவிர வெளிக்காட்டலாகாது. தங்கள் முந்தானையால் மார்பகங்களை மறைத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துகிறது.
நாகூர், திட்டச்சேரி, காரைக்கால், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் துப்பட்டி அணியும் வழக்கத்தை வைத்துள்ளனர். இத்துப்பட்டி 10 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை உள்ள வெள்ளை நிறமான துணியின் இரண்டு பக்கங்களை ஒன்றாக்கி வைத்துத் தலைப்புப் பகுதியை கொசுவி ஒரு போர்வையைப் போல் தோளில் போர்த்திக் கண், மூக்கு நீங்கலாக ஏனைய பகுதிகளை மறைத்து அணிந்து கொள்வதாகும். இராமநாதபுரம் பகுதிகளில் 8 முழ வெள்ளை வேட்டியைத் துப்பட்டி போல அணிந்து செல்லும் வழக்கம் காணப்படுகிறது. தற்பொழுது கருப்பு நிற அங்கியை அணிகின்றனர்.
திப்பு சுல்தான் வடகேரளத்தைக் கைப்பற்றி தனது ஆட்சியைப் பரவலாக்கியபோது மலபார் கவர்னருக்கு 1785 ல் அரசு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் மலபாரிகள் சில இனப்பெண்கள் மார்பகங்களைத் துணியால் மூடாமல் செல்வது எமக்கு வருத்தம் அளிக்கிறது. நல்ல உணர்வுக்கும், ஒழுக்கத்திற்கும் ஒவ்வாத உறுத்தலான காட்சி அது. அது பழங்குடி மக்களின் வழக்கமென விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அது அவர்களின் தொன்மையான வழக்கமா? இல்லை வறுமையின் விளைவா? வறுமை காரணம் என்றால் அவர்கள் மேலாடை அணிவதற்கான அனைத்து உதவிகளையும் உடன் வழங்குங்கள். அது அவர்களது மரபு என்றால் இனத் தலைவர்களிடம் பேசி ஒத்துழைப்பைப் பெற்று அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதற்கான முயற்சி அவர்களது மத நம்பிக்கைப் புண்படாவண்ணம் நட்பு ரீதியில் மேற்கொள்ளுங்கள் என ஆணையிட்ட பின்னர் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணிய சட்டம் இயற்றப்பட்டது. (டாக்டர் வெ.ஜீவானந்தம்(தொகுப்பு ஆசிரியர்) திப்பு சுல்தான் விடுதலைப்போரில் முன்னோடி. பக்கம் 10)
இந்துக்களில் சாமியார்கள் மற்றும் கோயில் குருக்கள் தலையில் தலைப்பாகை அணிவது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
கிறிஸ்தவ மதத்தில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பெண்கள் தலையில் தலையை மூடி பிரார்த்தனை செய்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் வழிபாட்டின்போது பெண்கள் தலையைத் துணியால் மூடிக்கொள்வது மரியாதை நிமித்தமாகவே நடைபெறுகிறது. இதில் கூறப்படுவது யாதெனில் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கிறிஸ்து தலையாய் இருக்கிறார் என்பதாகும். ஜெபம் செய்கின்ற போதாவது, தீர்க்க தரிசனம் சொல்லுகிற போதாவது தன் தலையை மூடிக்கொண்டிருக்கின்ற எந்த ஆணும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். ஜெபம் பண்ணுகிறபோதாவது அல்லது தீர்க்க தரிசனம் சொல்லுகிற போதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை கனவீனப் படுத்துகிறாள். ஆண் தலைமயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாய் இருக்கிறதென்றும் பெண் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாய் இருக்கிறதென்றும், சுபாவமே உங்களுக்கு போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாக் கொடுக்கப்பட்டிருக்கிறதே என புதிய ஏற்பாட்டில் கொரிந்தியர் 2ல் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது அவர்களது மத அடையாளமாகச் சின்னமாக அமைகிறது. இதனால் சீக்கியர் சிறிய குழந்தையிலிருந்து தலைமயிரை வளர்த்து அதற்குப் பின்னரே தலைப்பாகை அணிவதை மதத்தின் அடையாள வைத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்வழி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 1857 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தில் பிறந்தவரான காதர்பாட்சா என்பவர் இந்து மத கடவுளான சிவனை வழிபட்டு வந்தவர். இவர் 120 ஆண்டு காலம் வரை உயிர்வாழ்ந்துள்ளார். இவருடைய காலத்தில மெய்வழிச்சாலை என்ற மதத்தை தோற்றுவித்தார். இவரை தற்பொழுது சாலை ஆண்டவர் என அழைக்கின்றனர். இவருடைய சமாதியை காணச்செல்கின்ற ஆண்கள் கண்டிப்பாக தலைப்பாகை அணிந்து செல்லவேண்டும். பெண்களாக இருந்தால் தலையில் முக்காடு போட்டுச்செல்லவேண்டும். இவையிரண்டும் இல்லையெனில் கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டார்கள். தலைப்பாகையையும் இரண்டுவிதமாக பிரித்து வைத்துள்ளார்கள். வெள்ளை தலைப்பாகை அணிந்தவர்கள் மெய்வழி மதத்தில் சாதாரணமானவர்கள். காவி நிறத்தில் தலைப்பாகையில்; பிறை போன்ற சின்னம் அணிந்திருந்தால் இந்துமத உபதேசம் செய்பவர்கள் என அழைக்கின்றனர். இவர்களை அனந்தவர் என அழைக்கின்றனர். மெய்வழி கிராமத்தில் நுழையும்போது நுழைவு வாயிலில் ஆதியே துணை என்றும், சத்தியதேவ பிரம்ம குலத்தின் ஆலயம் எனவும் எழுதப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த நூற்றாண்டுக்கு முன்பு தலைப்பாகை அணிந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தலைப்பாகையை கட்டினால் உயிர்போகும் வரையில் சித்திரவதை நடந்ததுள்ளது என்பது வரலாறு.
கண்ணியாகுமரி மாவட்டத்தில் கணியான் கூத்து என்று அழைக்கப்படுகின்ற மலைவாழ் மக்களின் பெயரால் அழைக்கப்பட்டது. இக்கூத்து இவ்மாவட்டக்கோவில்களில் கணியாட்டம் என்கிற பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மகுடாட்டம் என்னும் பெயராலும் அழைக்கப்பட்டது, இந்த ஆட்டக்கலையை நிகழ்த்துகிறபோது தலைமைப் பாடகர், துணைப்பாடகர், மகுடம் இசைப்பவர்கள், பெண் வேடம் போட்டு ஆடுபவர்கள் என்று ஒரு கலைக்குழுவே செயல்படும்.
இடைநிலைச் சாதி மக்களின் கோவில்களில் பெரும்பாலும் பாடப்படுகிற மந்திரவாதப் பெரும் புலையனையும் அவரது நிறைமாதச் ச+லியாக இருக்கிற மகளையும் காவுகொண்ட சுடலைமாடன் பெருமையே கதையில் சொல்லப்படும் செய்தியாகும்.
இந்த கணியாட்டம் மூன்று நாள் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கணியாட்டம் ஆடுபவர்கள் சாமியின் நேரே நின்று கொண்டு தான் ஆடிப்பாடி வரவேண்டும். இவை ஒரு நாளிலிருந்து மூன்று நாள் வரை தொடர்ந்து நீடிக்கும்.
வில்லிசையென்பது சாமிக்கு நேரே உட்கார்ந்து, தலைப்பாகை அணிந்து, கம்பீரத்தோடு கோலையெடுத்துக் தலையைச் சுழற்றி அடித்துப் பாடுவார்கள். பெண்களாக இருந்தால் புடவை கட்டிக்கொண்டு தலைநிறையப் ப+வைத்து சாமிக்கு நேரே உட்கார்ந்து கொண்டு பாடுவார்கள். இவர்கள் சாமியாடுகிற கோமரத்தாடியையும் சில நேரம் கதைத்தலைவனையும் கிராமத்துப் பாணியில் கிண்டல் செய்தபடி பாடுவார்கள். பண்டைய காலத்தில் நாடார் இன மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இப்பகுதியில் வாழ்ந்தார்கள். ஆகையினால் அவர்கள் தலைப்பாகை அணியக்கூடாது. ப+வும் பொட்டும் வைக்கப் பெண்களுக்கு தடை, தோள்சீலை அணியக்கூடாது என்றெல்லாம் இருந்தது. இவையெல்லாம் இந்த வில்லுப்பாட்டுக் கலையில் மீறப்பட்டிருக்கிறது. தலைப்பாகை இறைவனுக்குக் கொடுக்கும் மரியாதையென்று மீண்டும் ஒரு அடிமை முறையையும் தாழ்வு மனப்பான்மையையும் வளர்ந்தெடுக்க உதவியது.
பெண்கள் ஆடை மேலாடை அணிய போராட்டம்
மனுநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகம் மன்னர்களும், பிராமணர்களும், ஜமீன்தார்களும், பிராமணர்களும், கீழ் நிலையில் உள்ள சாதிப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவற்கான சட்ட ப+ர்வமான உரிமையை வழங்கியிருந்தாலும் கூட பெண்களின் மார்பு முழுவதும் மறைக்காமல் இருந்த ஆடை உடுத்து முறைமையால் பாலியல் தூண்டலைச் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டத் துணிவும் இல்லை. ஐரோப்பியர் வரும்போது சேலைத் தலைப்பில் மூடுவதைப்போல தங்கள் நாட்டவர் வரும்போது செய்தும் இல்லை என்ற கூற்று இதை உறுதிப்படுத்துகிறது.
1812 ஆம் ஆண்டு கர்னல் மன்றோ கிருஸ்தவராக மாறிய பெண்கள் மற்ற தேசத் கிறிஸ்தவப் பெண்களைப்போல் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள உரிமையளிப்பதாக ஆணையை பிறப்பித்தார். சார்லஸ் பீட் என்ற பாதிரியாரர்; கிருஸ்தவ ஆலயங்களுக்கு வரும் பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமைத்து அணியச்செய்தார். இவரும் இவரது துணைவியாரும் பெரும் பங்கு வகித்தனர். கேரள வரலாற்றாசிரியர் சங்குண்ணி மேனன் மேலாடைப் போராட்டத்திற்கு தலைவராக மீட்ட அவர்களே இருந்தார். இந்தப் போராட்டம் தோல் சீலை போராட்டம் என்று அறியப்பட்டது.
திருவிதாங்கூர் பகுதியில் இவ்வாறு மேலாடை உடுத்தும் உரிமைகளை போராட்டம் நடைபெற்றது என்றாலும் 1812 ஆம் மன்றோ கிருஸ்தவர்களாக மாறியவருக்கு பெண்கள் மேலாடை அணியாமல் என்று உத்தரவிட்டுவிட்டால் இந்திய ஆதிக்க சக்திகள் 1822 ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு உள்ளேயே மேலாடை அணிந்து பெண் அவமரியாதைக்கு ஆட்படுத்தப்பட்;டனர். இதனை ஒட்டி ஓராண்டு காலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. 1823 ஆம் ஆண்டு நீதிமன்றம் கிறிஸ்தவ பெண்கள் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பளித்தது. 1827 ஆம் ஆண்டு ஆத்தூர், திற்பரப்பு, புலிப்பனம் போன்ற இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனை அடுத்து நெய்யாற்றங்கரையில் தொடங்கிய போராட்டம் பாறை சாலை, நெய்ய+ர் போன்ற ஊர்களுக்கும் பரவியது. பல இடங்களில் பெண்கள் தாக்கப்பட்டனர். டிசம்பர் 30, 1859 ஆம் ஆண்டு இப்போராட்டத்தில் பெரிதும் ஈடுபட்ட கிறிஸ்தவ சாணார், இந்து சாணார் பகுதியினருக்கும் நாயர்களுக்குமிடையே மிகப்பெரும் மோதலாகவே வெடித்தது.
தொடர் போராட்டத்தின் விளைவாக 1859 ஜூலை 26 ஆம் நாள் அனைத்து சமயத்தைச் சேர்ந்த சாணார் பெண்களும் மேலாடை அணியலாம். ஆயினும் இவ்வுரிமை தாழ்;த்தப்பட்ட பெண்களுக்கு இல்லை என்றாயின. திருவாங்கூர் மகாராணியின் முன்னாள் மேலாடை அணிந்து சென்றதற்காக மார்பை வெட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. கன்னியாகுமரி அருகே கொட்டாரம் எனும் ஊரில் திருமணமான சில நாளிளே தாலி, மேலாடை அணிந்து வந்த பெண் அரசாணையை மீறிவிட்டதாக கூறி பொது இடத்தில் தாலியறுத்து உடைகளைக்களைத்து, அரசின் படையால் படுகொலை செய்யப்பட்டாள். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் மேலாடைய அணியவேண்டும் என்றால் அதற்கு வரி செலுத்தவேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டது. சாணார் பகுதியில் நில உடமையாளர்கள் கொஞ்சம் பேர் இருந்தனர். அவர்கள் வரி செலுத்தினர். அவ்வாறாக வரியும் அதிகாரியின் விருப்பதற்திற்கு ஏற்ப அரசு நிர்ணயித்த வரியை விட பல மடங்கு கூடுதலானதாக இருந்தது. வரி செலுத்த இயலாவர்கள் நேராக நிற்க வைத்து, பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்கவிடுதல், சிறையிலடைத்து சித்ரவதைகள் செய்தல் போன்ற தண்டனைகள் உண்டு. அந்த கால கட்டத்தில் கட்டப்பட்ட கோயில் கோபுரங்களில் பெண்கள் மேலாடை அணியாமல் தங்களது மார்பகத்தை காண்பித்தவாறு பல சிலைகள் வடிக்கப்பட்டதற்கு பல சிலைகள் சாட்சிகளாக உள்ளது.
இவ்வாறாக பல்வேறு போராட்டங்களின் மூலம் தன்னுடைய தலையில் துணியை கட்ட போராடிய மக்கள். இன்று தலைப்பாகை, தலப்பாக்கட்டு, சும்மாடு என்பது எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக மாறியுள்ளது. அதே போல பெண்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் புதையுண்டு பாரம்பரியமான சேலை, தாவணிகளை புறந்தள்ளிவிட்டு மேலாடைகளை குறைத்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயமே. இருப்பினும் மறைந்துபோன, மறக்கடிக்கப்பட் ஒரு தலைப்பாகையை பிரியாணி மூலம் நினைவ+ட்டுவது வரலாற்றின் சரித்திரக்குறியீடு தான்.

வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602.
தேனி மாவட்டம்
செல்:9715795795

Series Navigationதமிழ்தாசன் கவிதைகள்—–ஒரு பார்வைநாடக விமர்சனம். சேது வந்திருக்கேன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *