மறந்து விடச்சொல்கிறார்கள்

Spread the love

பா.உதயன்

உங்கள் வீட்டுப்
பெண்களுக்கு
மார்புகள்
வெட்டப்படவில்லை

உங்கள் பிள்ளைகள்
எவரும்
தொலைந்து போகவில்லை

உங்கள் பிள்ளைகளை
எவரும் வல்லுறவு
செய்யவில்லை

உங்கள்
சொத்து சுகங்கள்
எதையும்
நீங்கள்
இழக்கவில்லை

பசி பட்டினியால்
நீங்கள்
எவரும் இறக்கவில்லை

இழந்தது
எல்லாம்
நாங்கள் மட்டுமே

ஒரு பொல் பொட்டையோ
ஒரு ஹிட்லரையே
ஒரு ஸ்டாலினையோ
ஒரு முசோலினியையோ
அந்த மக்களை
மறக்கச் சொல்லுங்கள்
நாமும் மறந்து விடுகிறோம்.

பா.உதயன் Oslo Norway

Series Navigationஇத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறதுஎனக்கான வெளி – குறுங்கதை