மழையின் முகம்

துளி துளியெனத் தூளியில்

ஆடிப் பாடுகிறது மழை.

பக்கம் பக்கமாய்

மணலில் எழுதி

கடலில் சேர்க்கிறது

காவியமாய்.

வரையும் சித்திரம்

வளர்கிறது விரிகிறது

இலையாய் மலராய்

மரமாய்.வனமாய்.

காங்கிரீட் தளங்களில்

விழுந்து எழுந்து

காயமும் படுகிறது.

கொட்டிக் கொட்டி

கண்ணாடியில்

முகம் பார்க்கிறது

மழை.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationஒஸ்திபஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்து