மார்கழிப் பணி(பனி)

அஜய் குமார் கோஷ்
அறந்தாங்கி

பெண்பூக்கள்
மாக்கோலமிட
வருகிறது மார்கழி

சிரிப்புக்களுடன்
தெரு நிறைகிறது
வருகிறது மார்கழி

மெல்லிய பனியில்
மனது நனைகிறது
வருகிறது மார்கழி

மரபின் ஈரம்
காய்ந்து போய்விடவில்லை
வருகிறது மார்கழி

Series Navigationஇரு வேறு நகரங்களின் கதைஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 2