மார்கழியும் அம்மாவும்!

Spread the love

நிஷா

அதிகாலை அரைத்தூக்கத்தில்,
எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு,
ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து,
கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர-
சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி,
மழை தூறலாய் அதில் நீர் தெளித்து,
முத்துச்சரமாய் புள்ளி வைத்து,
பட்டு நூலாய் கோடுகள் வரைந்து.
வானவில்லாய் வண்ணங்கள் நிரப்பி,
விசாலமாய் வாசல் நிரப்பும் கோலம்!

பால்யத்தில்,
இயல்பாய்,
எளிதாய்,
அழகாய்,
ரசனையை சொல்லாமல் சொல்லித்தந்த தேவதை – அம்மா!

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள் -4, 5, 6ஊசலாடும் இலைகள்…