மீகாமனில்லா நாவாய்!

Spread the love
மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி
நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம்
வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும்
வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி
மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும்
மீகாமனில்லா நாவாய்  நீராழியலையின்
மிதவையாய்  வெள்ளத்தினூடே ஓயாமல்
 காற்றின் திசையில் சிறகடித்தபடி
 ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி
மதங்கொண்ட களிறே போலோடியது
நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள்
பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள்
குத்தீட்டியால் குத்திக் கிழித்தாலும்
குழம்பித் திரியா வான்மேகங்கள்
முகமூடியணியும்  விடையறியா வினாக்கள்
அக்கரை செல்ல அக்கறையாய்
கலங்கரை விளக்கை நாடும்
வெள்ளோட்டத்தில் கரை காணா
விண்ணேகும் விதியறியா நாவாயது!​

​அன்புடன்
பவள சங்கரி

​​

Series Navigationஆத்ம கீதங்கள் –13 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. !பேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்