மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது

Spread the love


க.சோதிதாசன்

என் நகரத்தில்

அமைதி பிரகடனபடுத்த பட்டிருக்கிறது

 

வீதிகள் அழகு படுத்த படுகிறது.

 

இடிபாடுகளில் இருந்து

புதிதாய் முளைக்கின்றன

சீமெந்து காடுகள்

 

நகர அரங்குகளில்

இரவ நிகழ்சி களைகட்டுகிறது

 

அயல் நாட்டு பாடகர்கள ்

உச்சஸ்தாயில் இசைக்கிறார்கள்

விரசம் வழியும் பாடல்களை

 

அன்னிய மொழி பெண்ணின் நடனத்திற்கு

எழுகிற சிவில் சத்தத்தில்

அதிர்கிறது காற்று

 

மீண்டும் அமைதி சமாதானம் அறிவிக்கப்படுகிறது.

 

அரசியல் தலைவர்கள் அச்சமில்லாது

மாலை ஏற்க்கிறார்கள்

 

அடையாளம் நிருபிக்கபடாமல்

என்னால் நகர முடிகிறது

 

எல்லாம் சரி தான்

என்னுடய நிலம்

இன்னொருவனுடயதாகியிருக்கிறது.

Series Navigationஅமேசான் கதைகள் – 3 நிலவைத் தேடி..இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு