மீதம் எச்சம்தான்…

தினேசுவரி , மலேசியா

 

அவசரத்தில் அன்பு பார்த்து

மணம் ஏற்ற தருணங்கள்

தகரங்களாய் மட்டுமே

துருபிடித்து…

நல்ல வேளை நினைவுகள்

நிழலாகவும் புகையாகவும் இல்லை

புதைத்துவிட ஏதுவாய்…

பொன் பித்தளையாகி கறுத்து

கழுத்து வரை சீழ்பிடித்து …

மீந்தது மிச்சம் இருந்து

காய்ந்து போன இரத்த வாடை…

இது வாடகை வாழ்க்கை உயிருக்கு

மட்டுமல்ல உடலுக்கும்தான்…

இது ஆண்மைக்கும் பெண்மைக்குமான

முரண்பாடு அல்ல …

ஆம்பிளைத்தனத்தில்

கீழ்மட்ட செயல்பாடு …

உயர்மட்ட இக்கல்வியை

பள்ளியறை சென்றுதான

படிக்கவேண்டியுள்ளது…

பிறகு பட்டமும் பெற

தொடர்கற்றலாய்

அவசரத்தில் அன்பு பார்த்து

‘மனம’்பரிந்த தருணங்கள்

மீண்டும் மீண்டும் துருபிடித்து…

– தினேசுவரி , மலேசியா

Series Navigation