முக்கோணம்

சத்யானந்தன்

என் பிரச்சனையில்
தலையிட்டவர்கள்
அதை
மேலும் சிக்கலாக்கினார்கள்

எனக்காகப்
பரிந்து பேசியவர்கள்
என்னை
தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள்

வலியவந்து உதவிகளின்
தாக்கம்
பல வருடங்கள்
என் வழிகளை மறித்தது

என் முனைப்பில்
திட்டமிடல் இயங்குதல்
எல்லாம் புறத்தில்
தீர்மானிக்கப்படும் திசையில்

தற்காலிக சகபயணி
எதிர்ப்பயணி யாவரும்
ஒரு அமைப்பின்
பன்முகங்கள்

உன் உரிமை
என் கனவு
என்றும் நேரெதிராய்
அமைப்பின் அதிகாரம்
என்னும் புள்ளி
மூன்றாவதாய்

எட்டு திக்கும்
முக்கோணத்துக்குள்

Series Navigationபாவேந்தரின் காதற் குற்றவாளிகள்– இசை – தமிழ் மரபு (2)