முதிர்ச்சியின் முனகல்

Spread the love

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்

 

மீசை வளர்ந்து விட்டால்

துள்ளும் ஆசைகள் அளக்களிக்கும்

வயதின் உடல் பெருத்தால்

    விருப்பம் உடலை மெலித்துக்கொள்ளும்

வருவதும் போவதுமே இங்கே

    வாடிக்கையாகிறதே ,உள்ளே

நுழவது பல கோடி…

செடி மர கொடியாய் உருமாறி

     வெளியே திரிவது பலசாளி

உயிரைக் காத்திட வழி தேடி

 

தொடரும்…முடியும் காலத்தில்

   நகரும் நொடியின் சாலையில்

காதல், மழையும் தருகிறது…

   காயும் உயிரில்‌ நுழைகிறது….

செய்தி, செழிப்பாய் வளர்கிறது

    போதும் உனக்காய் மலர்கிறது

வீழும் சருகாய் விடைபெறவே

 

   தோலில் தெரியும் முதல் கனமே

        தீயில் சுருளும் சருமங்களே

ஓடி திரிய முடியலையே

     ஓடி விழுந்த இடங்களிலே

தோலில் சுமக்க முடியல

   தேரில் சென்ற மகளையே

நானும் ஏற்ற முடியல

    வானம் கேட்ட மகனையே

ஆசை தீர்க்க முடியலையே…

     மௌனம், கேட்ட உதடுகள்..

வளர்ந்து நின்று ஆற்றுது

   பாச தேனை ஊட்டுது…

நெஞ்சம் கொஞ்சம் நெகிழுது

   பஞ்சும் அதனை நனைக்குது

பஞ்சம் தீர்த்த பாடவி

சிரித்து சிதைந்த பூஅவள்

தவிக்கும் சிறையில் நானுமே…

அடிக்கடி களிப்பூட்டும்

கைவிரல் கோர்த்து

அவள் விளைந்த முத்துக்கள்

ஆறுதல் தரும் அன்பினாள்

என்னை கெட்டியாக பிடித்துக்கொள்கின்றன

நாம் நட்டு வளர்த்த செடியோ

மரமாக அதன் நிழற்குடையின்

கீழ் கையிலே உன் முத்துவின் முத்து

நம் பேரனே….

—————————–

 

 

ஆ. ஸ்டாலின் சகாயராஜ்,

Series Navigationதடைகனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்