முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

மலாயாப் பல்கலைக்கழகத்தில்
ரெ.கார்த்திகேசு கருத்தரங்கு.

பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தமிழ்க்கூறு நல்லுலகம் அறிந்த இலக்கியவாதியுமான முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலத்தில் 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலமும் இணைந்து இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

முனைவர் கார்த்திகேசுவின் சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், அவரின் வானொலிப் பணி என நான்கு துறைகளை அலசி ஆராயும் வகையில் முறையே கோ. புண்ணியவான், முனைவர் சேகர் நாராயணன், ஆய்வாளர் மணியரசன், கவிஞர் மைதீ. சுல்தான் ஆகியோர் கட்டுரை படைக்கவிருக்கின்றனர். இந்தக் கட்டுரை அங்கத்திற்கு எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் தலைமையேற்பார்.

கருத்தரங்கில் படைக்கப்படும் நான்கு கட்டுரைகளும் நூலாகத் தொகுத்தளிக்கப்படும். முனைவர் கார்த்திகேசு படைப்புகள் பற்றி வாசகர்களும் அவரின் சமகால எழுத்தாளர்களும் தெரிவித்த கருத்துகளும் நூலில் இடம் பெறும்.

டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் படைப்புகளை மின்னூலாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் அறிமுக விழாவும் இந்நிகழ்ச்சியின்போது நடைபெறும்.

இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பெ. இராஜேந்திரன் அழைக்கிறார்.

Series Navigationதொடுவானம் 107. அவள் பறந்து போனாளே!