“முள்வேலிக்குப் பின்னால் “ – 7 இராமசாமி

author
0 minutes, 10 seconds Read
This entry is part 6 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

 

“ராம் நாங்கள் மூவரும் ஊடகவியலாலர்கள். என் பெயர் மகேஷ். எங்களோடு இருக்கும் ஜோன் கனடா தேசத்தில் வேலை செய்யும் ஊட்கவியலாளர். மற்றவர் பெயர் லலித். அவர் கொழும்பில் வெளியாகும்; ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் துணை ஆசிரியர்.  நாங்கள் உம்மோடு பேசவே வந்திருக்கிறோம். எங்களுக்குச் சில நிமிடங்கள் தயவு செய்து ஒதுக்க முடியுமா”, மகேஷ் கேட்டார்.

 

“ நிட்சயமாக”

 

“ ஏற்கனவே நேர்ஸ் சாந்தி எங்களுக்கு உம்மைப் பற்றி சொன்னவ. உமக்கு மூன்று மொழிகளும் தெரியும் என்றும் சொன்னவ. ஆதனால் ஜோன் உம்மிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகள் கேட்;க விரும்புகிறார்” என்றார் மகேஷ்.

 

“ தாராளமாய் கேட்கட்டும்” என்றார் ஆங்கிலத்தில் ஜோனைப் பார்த்து ராம்.

 

“ ராம் எங்கு இவ்வளவு தெளிவாக ஆங்கிலம் பேச எங்க கற்றுக் கொண்டீர்”? ஜோன் ராமைக் கேட்டார்.

 

“ நான்; எலக்ட்ரீசனாக வேலைசெய்த டிக்கோயா தெயிலைத் தோட்டத்து பெரியதுரை என்று அழைக்கப்படும் எஸ்டேட் சுப்பிரீன்டென்டன் வொட்சன் என்பவரே நான் ஆங்கிலம் பேச உதவியவர். அவர் மற்றையத் தோட்டத்துப் பெரியதுரைகளை விட முற்றிலும் வேறுபட்டவர். தமிழும் ஓரளவுக்குப் பேசுவர். தோட்டத் தொழிலாளிகளின் நலன்களை அக்கரையோடு பார்த்தவர். பல வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து  இலங்கை வந்தவர். அவர் இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பிப்போகமுன், என் தந்தையின் சேவையைப் பாராட்டி ஒரு சிறுவீடு வாங்கப் பணம் கொடுத்து உதவியவர் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்”.

 

“ அது சரி எப்படி உமக்கு அவரோடு தொடர்பு ஏற்பட்டது”?

 

“ அடிக்கடி என் தந்தை வொட்சன் துரையின் பங்களாவுக்கு போய் அவர் தோட்டத்தை பராமரிப்பார். நான் சிறு வயதில் அவர் கூடவே சென்று அவருக்கு உதவுவேன். குழந்தைகள் இல்லாத வொட்சன் துரையும் அவர் மனைவியும் என்மேல் பாசம் காட்டினார்கள்;. அவரிடம் இருந்தே நான் ஆங்கிலம் பேசக் கற்றேன்”.

 

“ அது சரி எப்படி நீர் எலக்ட்ரீசனானீர்”?

 

“ அதுவும் வொட்சன் துரையின் உதவி என்றே நான் சொல்லுவேன். ஒரு நாள் எனக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது துரையின் வீட்டுக்கு நான் என் தந்தையோடு போயிருந்த போது அவர் வீட்டில் மின்சாரத் தடை எற்பட்டது. வீட்டு விளக்குகள் எரியவில்லை. அதைக் கண்ட நான் துரையின் அனுமதியோடு பியூசை மாற்றி திரும்பவும் மின்சாரத்தை வீட்டடில் எரியச் செய்தேன். அதைக் கண்ட துரை, என்னிடம் எலக்டடிரிக்கல் வேலை செய்யக் கூடிய திறமை இருக்கிறது என்பதைக் கண்டு என்னை தன் சொந்த செலவில் ஒரு டெக்னிகல் கல்லூரியில் பயிற்சி பெற அனுப்பி எலக்டிரீசனாகவர உதவிசெய்தார். அதுவுமலலாமல் அவரின் தொட்டத்துத் தொழிற்சாலையில் எலக்ட்ரீசனாக வேலையும் போட்டுக் கொடுத்தார்.. அதுவே என் ஆரம்பம். வொட்சன் துரை இங்கிலாந்து சென்றபின் தோட்டம் அரசுமயமாகப்பட்டதும் ஒரு சிங்களவர் தோட்டத் துரையானார். புதுத் துரை இனத்துவேசம் உள்ளவர். அவருக்கும் தொழிலாளிகளுக்கும் ஒத்துப்போனதில்லை. தமிழன் என்றாலே தொழிலாளிமேல் குற்றம் கண்டு பிடிப்பார். எனக்கு தோடர்ந்து தொழிற்சாலையில் வேலை செய்யப் பிடிக்கவில்லை அந்த நேரம் தான் விடுதலை புலிகள் தம் இயக்கத்தில் வேலை செய்ய ஒர எலக்ட்ரீசனைத் தேடுவதாக அறிந்;தேன். ஏற்கனவே நான் தமிழ் பற்றுக் கொண்டவன். அதனால் இயக்கத்தில் சேர்ந்து என் சேவையை வழங்க முடிவெடுத்தேன் “, ராம் சொன்னார்.

 

“ அப்போ உமது ஒரு காலுக்கு என்ன நடந்தது” ?

 

“ அதுவும் ஒரு கதை. ஒரு நாள் நான் இரு போராளிகளோடு அவர்களின் வாகனத்தில் போய் கொண்டிருந்த போது கண்ணி வெடி தாக்குதலுக்கு எங்கள் வாகனம் உற்பட்டது. என்னோடு வந்த இரு போராளிகளும் உயிர் இழந்தார்கள். நான் உயிர் தப்பியது நான் செய்த புண்ணியம். ஆனால் நான் அவ்விபத்தில் என் இடது காலை இழந்தேன். யுத்தம் முடிந்ததும், விடுதலை புலிகளுக்கு நான்; உதவியதாக புலிகள் இயக்கத்துக்கு எதிரான ஒற்றர் குழு என்னை இராணுவத்துக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது அதன் விளைவே அகதிகளோடு அகதியாய் இந்த முகாமுக்கு அழைத்துவரப்பட்டேன். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நான் பரந்தன சென்றிருந்ததினால் உயிர் தப்பினேன்”, ராம் தான் ஒரு காiலை இழநத விபரத்தைச் சொன்னார்.

 

“ அப்போ நேர்ஸ் சாந்தியை எப்படித் தெரியும்”, ஜோன் கேட்டார்

 

“ இந்த முகாமுக்கு வந்த பிறகு டாக்டர் ராஜா, நேர்ஸ் சாந்தி, மஞ்சுளா ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்களைப்போல் படித்த சில திறமைசாலிகள் பலர் இந்த முகாமில் அகதிகளாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் எப்போது விடிவு காலம் கிடைக்குமோ தெரிரயாது . சாந்தி, டாக்டர் ராஜா போன்றோர் அகதிகளுக்குச் செய்யும் சேவையைப் பார்த்து பிரமித்துப்போனேன். மூன்று மொழிகளும் தெரிந்தபடியால் ஒரளவுக்கு இராணுவ சிப்பாய்களோடு பிரச்சனைப் படாமல் இருக்கிறேன். சாந்திககும் உதவியாளராக இருக்கிறேன்” , என்றார் ராம்.

 

“புலிகள் இயக்கத்தை ஆரம்பித்த இயகத்தின் தலைவர் எக்காரணத்தால் இதை ஆரம்பித்தார் என்று சொல்ல முடியுமா ராம்”? ஜோன் ராமை கேட்டார்.

 

“சிறீலங்காவுககு 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் பல இனக்கலவரங்கள் அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன என  பலர் சொல்லி;; நான் கேள்விப்பட்டேன். விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் சிறுவனாக இருக்கும் போது அவர் இனத்தவர் ஒருவர் இனக்கலவரத்தால் உயிர் இழந்தார் எனவும், அந்த பாதிப்பே அவரை ஈழத்தமிழ் இனத்தை அடக்குமுறையில் இருந்துகாக்க விடுதலை புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தார் என்று. அரசின் அடக்குமுறை சட்டங்கலால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அவர் ஆரம்பித்த இயக்கத்தில் சேர்ந்தனர்” என்றார் ராம்.

 

“ஒரு கேள்வி ராம், எந்த விதத்தில் மலைநாட்டு தமிழர்களை இனக்கலவரங்கள் பாதித்திருக்கிறது என்று சொல்ல முடியமா?

 

“சிறிலங்காவில் தமிழன் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவனைத்  தங்கள் விரோதியாகவே சிங்களவர் கருதுகிறார்கள். 1977, 1980 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரத்தின் போது மலையகத் தமிழர்கள் வெகுவாகப் பாதிப்படைந்தனர். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகப் பல மலைநாட்டுத் தமிழர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். அதில் சிலர் வன்னியில் உள்ள காடுகளைத்  துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது கூட மலைநாட்டுத் தமிழர்கள் வெகுவாக பாதிபடைந்தனர். பலர் தமிழ்நாட்டுக்குப் பாதுகாப்பு தேடி ஓடினார்கள்” , என்றார் ராம்.

 

“ராம் நீர் சொல்வது உண்மை. ஆனால் அரசுக்கு இது தெரியாமல் இல்லை. அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டுமாகில் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களுக்கு எற்ப அரசியல் நாடகம் ஆடவேண்டும்”.

 

“ எனது தலையெழுத்து நான் ஒரு காலை இழக்கவேண்டும் என்று இருந்தது. ஆனால் ஒன்று, இந்த முகாமுக்கு வந்தபின் பலவிதமான மக்களைச் சந்தித்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னை விட மோசமான பிரச்சனைகள் உண்டு என்பதை அறிந்தேன். அது மட்டுமல்ல மக்களுக்காக சேவை செய்யும்; சில நல்ல மனிதர்களை  நான் சந்தித்தேன்” ராம் சொன்னார்.

 

“யார் அவர்கள் என்று குறிப்பாகச் சொல்லமுடியுமா ராம்” , ஜோன் கேட்டார்.

 

“வேறு ஒருவருமில்லை. டாக்டர் ராஜாவும் அவர் மகள் நேர்ஸ் சாந்தியும் தான். சாந்தியின் சந்திப்பு என்னை புதுமனிதனாக்கிவிட்டது. அவர் எனக்கச் சொன்ன ஆறுதல்களும், ஆலோசனைகளும்  என்னை எனக்கு நடந்ததை மறக்க வைத்துவிட்டது. சாந்தியோடு பேசினாலே மனதில் சாந்தி ஏற்படும். கவலைகள் மறந்துவிடும்.” அவர் கை வைத்து சிகிட்சை செய்தாலே நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அதே போல் தான் அவவின் தந்தை டாக்டர் ராஜாவும்;”. சாந்தியையும,; டாகடர் ராஜாவையும் வெகுவாகப் ராம்  பாராட்டிப் பேசினார்.

 

“அது சரி ராம் வெளிப்படையாகவே உம்மை ஒன்று கேட்கிறேன், நீர் சாந்தியை விரும்புகிறீரா” ஜோன் சிரித்தபடி கேட்டார.;

 

“நான் விரும்பினாலும் அவவின் இனத்தவர்கள் என்னை ஏற்கவேண்டுமே. அவவோ யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேளாளப் பெண். நானோ இந்தியாவில் இருந்து வந்து தெயிலைத் தொட்டத்தில் வேலை செய்த ஒரு கூலி ஒருவரின்   மகன்”, என்றார் ராம்

 

“ நான் அறிந்தமட்டில் டாக்டர் ராஜாவும்; சாந்தியும் சாதி, மதம்,; இனம் பார்ப்பவர்கள் இல்லை. முற்போக்கு கொள்கை உள்ளவர்கள். அதனால் நீரும் சாந்தியும் மனம் ஒத்தால் திருமணம் செய்வதற்கு தடையிருக்காது என நினைக்கிறேன்”, ஜோன் சொன்னார்.

 

“ ஜோன் முதலில் இந்த முகாமில் இருந்து விடுதலை பெற்றபின் திருமணத்தைப் பற்றி யோசிப்போம்” என்று சூட்சுமமாக ராம் பதில் அளித்தார்.

 

“ விடுதலை கிடைத்த பின்னர் மலைநாட்டுககுப்  போக நினைத்திருக்கிறீரா?

 

“ ஆமாம். அது நான் பிறந்து வளர்ந்த இடம். எனக்குப் பலரைத் தெரியும்.”

 

“ அங்கு போய் என்ன செய்வதாக உத்தேசம்”?

 

“ ஒரு எவக்டிரிகல் சொப் ஒன்றை அரம்பிக்க இருக்கிறேன். என்னோடு இங்கு முகாமில் அறிமுகமான மார்க்கண்டு என்பவர் பிஸ்னஸ் பார்டனராகச் சேர சம்மதித்திருக்கிறார். அதோ ஒரு முதாட்டியோடு பெசிக் கொண்டு நிற்கிறாரே அவர் தான் மாரக்கண்டு. அவர் முன்பு எலக்எரிகல் சொப் பூனகரியில் வைத்திருநதவர். அவருக்கு பிஸ்னஸ் அனுபவம் உண்டு. நல்ல நேர்மையான மனிதர். என்னை விட பதனைந்து வயது கூடியவர். போராளிகளான தன் இருமகன்களையும் இழந்தவர். அவரும்; அவர் மனைவியும் அகதிகளாக இந்த முகாமுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவரோடு பேசிப் பாருங்கள். அவர் ஓரளவுக்கு ஆங்கிலமும் பேசுவார்” ராம் சொன்னார்.

“ நல்லது. நீர் சாந்தியின் சேவைக்கு  உதவுவதால்; உம்மோடு அதிக நேரம் பேசி தாமதித்ததுக்கு என்னை மன்னிக்கவும்.” என்று கூறிவிட்டு மார்க்கண்டை  சந்திக்க நால்வரும் போனார்கள்.

******

 

 

 

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 9 விடுதலை“முள்வேலிக்குப் பின்னால் “ 8 -மார்க்கண்டு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *