“முள்வேலிக்குப் பின்னால் “ 8 -மார்க்கண்டு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 23 in the series 27 நவம்பர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

“ எனது நண்பர் மாரக்கண்டு இவர். முகாமுக்கு வர முன்பு கிளிநொச்சியில்; எலக்டிரிகல் கடை வைத்திருந்தவர். நான் ஏற்கனவே உங்களுக்கு இவரைப்பற்றிச் சொன்னதுபோல்  எங்களுக்கு விடுதலை கிடைத்து நாங்கள் வெளியே வந்ததும், என்னோடு சேர்ந்து பங்குதாரராக பிஸ்னஸ் செய்யப் போகிறார். நான் மேஜர் வின்சன்டை சந்திக்க வேண்டியிருக்கு. அவர் ஒபீசில் ஏதோ எலக்டிரிகல் பிரச்சனையாம். தன்னை உடனே வந்து பார்க்கச்சொல்லி செய்தி அனுப்பியருக்கிறார். நீங்கள் மார்க்கண்டோடு பேசுங்கள். அவரும் என்னைப் போல் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசுவார்” என்று கூறிவிட்டு மூவரோடும் கை குழுக்கி விடை பெற்றார் ராம். மூவரும் தங்களை மார்கண்டுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

“ மாரக்கண்டு உமது சொந்த இடம் யாழ்ப்பாணமா”? ஜோன் கேட்டார்.

“ இல்லை. நான் பிறந்து வளர்ந்தது பூனகரியில். எனது தந்தைக்கு ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரோடு தொடர்பு இருந்தது, அந்தப் பாதிரியார் தான் நான் ஆங்கிலம் கற்க உதவியவர். ஆனால் பூனகரி யுத்தத்துக்குபின் அங்கு வாழ விருப்பமில்லாமல் கிளிநொச்சிக்கு குடும்பத்தோடு இடம் பெயர்நதேன். அதோடு எனக்குப்  பூனகரியில்; இருபது ஏக்கர் வயற்காணி உண்டு.

“ உமக்கு எத்தனை பிள்ளைகள? முழு குடும்பமும் இந்த முகாமிலா இருக்கிறார்கள்;”?

“ இல்லை. நானும் என் மனைவிமட்டுமே முகாமிலை இருக்கிறோம்.”

“ அப்ப பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?”

“ எனக்கு இருந்தது இரண்ட மகன்கள்.. மூத்தவன் சீலன். இளையவன் பாலன். இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்கள். பல்கலைக்கழகத்துக்குப்போய் படித்துப் பட்டம் பெற்று என்ஜினியராவதே அவர்கள் இருவரதும் குறிக்கோள். ஆனால் அது நடக்கவில்லை” என்றார் மார்க்கண்டு.

“பிறகு என்ன நடந்தது”?

“ விரக்தியில் அவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தோடு சேர்ந்து போராளிகளாக இருந்தார்கள். பூனகரி யுத்தத்தில் அவர்கள் இருவரும்; இறந்து விட்டார்கள். அதுவும்ஒரு காரணம் நான் கிளிநொச்சிக்கு இடம் பெயர்வதற்கு.”

“ எதற்காக இராணுவம் உம்மையும் மனைவியும் இந்த முகாமுக்கு கொண்டு வந்தது.”?

“ எனது மகன்மார் இருவரும் புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர்கள் என்று இராணுவம் அறிந்ததினால் எங்களுக்கு அவ்வியக்கத்தோடு தொடர்பு  இருக்கலாம் எனச் சந்தேகித்து, விசாரிக்க இந்த முகாமுக்கு கொண்டுவந்தார்கள்.”

“உங்களை விசாரணை செய்தார்களா”?

“ விசாரணை என்ற பெயரில் என்னைத் துன்புறுத்தினார்கள். இதோ அதனால் என் தேகத்தில் ஏற்பட்ட காயங்கள்”. மார்க்கணடு தன் உடலில் உள்ள காயங்களைக் காட்டினார்.

“ உம்மையும் உடலில் உள்ள காயங்களையும் நான் படம் எடுக்கமுடியமா”?, ஜோன் கேட்டார்.

“ எனக்குப் பிரச்சனையில்லை. என் பெயரை மட்டும் போடாதீர்கள்”

மார்க்கண்டையும் அவரின் உடலில் உள்ள காயங்களையும் ஜோள் படம் எடுத்தார்.

“மார்க்கண்டு, நீர் விடுதலையானவுடன் இராமசாமியொடு பங்குதாரராக எலக்டிரிகல் கடை ஒன்றை அமைக்கப் போவதாக கேள்விப்பட்டேன். அதற்கான முதல் உம்மிடம் உண்டா”? ஜோன் கேட்டார்

.

“எனது பூனகரி வயற் காணியை விற்று வரும் பணம் போதுமானது”, மாரிக்கண்டு சொன்னார்.

“ அப்போ உமது மனைவியின் திட்டம் என்ன”?

“ அவ பூனகரியில் தமிழ் ஆசிரியையாக இருந்தவ. டீக்ஓயாவுக்குப் போனபின் அங்கு தோட்டத்துப் பிள்ளைகளுக்கு தமிழ் வகுப்புகள் வீட்டில் நடத்த யோசித்திருக்கிறா.”.

“ரசரி மார்க்கண்டு எஙகளோடு பேசியதுக்கு நன்றி. முகாமில் உள்வர்களின் விடுதலையை வேண்டி நான் என் கட்டுரையில் எழுதுவேன் “ என்று சொல்லி ஜோன் விடைபெற்றார்.

அவர்கள் மூவரும் மேஜர் வின்சென்ட் நன்றி சொல்லும் நோக்கமாக போய்கொண்டிருக்கும் பொது சுமார் அறுபது வயது முதியவர் ஒருவரை சந்திகக் நேர்ந்தது. வெர கைகூப்பி கண்ணீர விட்டது அவர்களின் கவனத்தை கவர்ந்தது,

” ஏன் ஐயா அழுகிறீரகள் .இராணுவம் உங்களைத் துனபுறுத்தியதா”? மகேஷ் அந்த முதியவரைக் கேட்டார்.

அழுகையோடு தான் அழும் காரணத்தைச் சொன்னார்.

“ஐயா என் பெயர் சினனையன். நான் ஒரு விவசாயி. எனது இரண்டு ஏக்கர் காணியில் புதுக்குடியிருப்புக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் எனது மனைவியும் எனது  நான்கு குழந்தைகளும் வாழந்து வந்தனாங்கள். சேல்லாலும் கண்ணி வெடியாலும் என் இரண்டு பிள்ளைகளை இழந்தேன். என் மற்ற இரு மகன்களை இராணுவம் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு சென்றார்கள்.” சின்னையன் சொன்னார்.

“ அவர்கள் திரும்ப வரவில்லையா”?

“ எங்கே ஐயா அவர்கள் திரும்பி வரப்போகிறார்கள், இது போல கைதாகிப் போனவர்கள் போனவர்கள்தான்”.

“ ஒரு வேலை அவர்களை இன்னும் இராணுவம் விசாரித்துக் கொண்டிருக்கலாம்”.

“ அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்களை விடுதலை செய்தால், எங்களை எங்கள் உருக்கு

அனுப்பவேண்டும். ஆனால் அது நடக்காது போது போலத்  தெரிகிறது .”

“ ஏன் அப்படி சொல்லுகிறீரகள். “?

“ இந்த முகாமிலை எண்டை ஊரைச் சேர்நதவர்கள் என்னைப்போல் புதுக்குடியிருப்பில் வாழ்ந்தவர்கள் பல இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள் எங்களுக்கு எங்கள் ஊருக்குத் திரும்பவும் போகக் கிடையாது எண்டு. கண்ணி வெடிகள் இல்லாமல் சுத்தம் செய்கிறோம் என்று காலம் தாழ்த்துகிறார்கள். அதுவுமல்லாமல் சில சிங்கள குடும்பங்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்கிறார்கள். அதோடு ஒரு புத்த விகாரை ஒன்றையும் எங்கடை ஊரில் கட்டுகிறார்கள். அவை  உண்மையானால் கண்ணிவெடிகளை அகற்றுகிறோம் என்று ஏன் பொய் சொல்லுகிறார்கள். என்னைப்போல் பல குடும்பங்களுக்கும் இதே நிலை”, சின்னையன் தனது ஆதங்கத்தை தமிழில் சொன்னார். மகேஷ் அவர் சொன்னதை ஆங்கிலத்தில் ஜோனுக்கு எடுத்துச் சொன்னார்.

“ஐயா, ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, விரைவில் உங்களுக்கு விடிவு கிடைக்கும்” என்றார் ஜோன். அதைத் தமிழில் முதியவருக்கு மகேஷ் மொழிபெயர்த்தார்.

முதியவரை அழுகையோடு படப்பிடித்துக் கொண்டார் ஜோன்.

இந்தச் சந்திப்புகளுக்குப் பின் நேரமாகிவிட்டதால் மெஜர் வின்சன்டை சந்தித்து நன்றி சொல்ல சென்றார்கள்.

“ எப்படி இருந்தது ஜோன், முகாம் பற்றிய உங்கள் பார்வை. பிரச்சனைகள ஒன்றும் இல்லாமல் பலரைச் சந்தித்திருப்பீரே. ஆவர்களது கருத்துக்களை கேட்டறிந்திரா? படம் எடுத்தீரா”? மேஜர் கேட்டார்.

“மிகவும்; நன்றி மேஜர். உங்கள் உதவியால், முகாமுக்குள் நடப்பதைக் கண்டறிந்தோம். பலரோடு உறவாடினோம். அனேகர் தங்களுக்கு எப்போது விடுதுலை கிடைக்கும், தாங்கள் சொந்த ஊர்களுக்குப் போய் தங்கள் காணிகளில் வாழமுடியமா? என்று தான் என்னைக கேட்டார்கள்”.

“நீர் என்ன சொன்னீர ஜோன்’?

“ நான் சொன்னேன் அவர்கள் அனைவருக்கும் வெகு விரைவில் விடுதலை கிடைக்கும், திரும்பவும் அவர்கள் புது வாழ்வு வாழ அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். போர் என்ற வந்தால் இது சகஜம் என்றேன்.” என்றார் ஜோன்.

“ நல்ல பதில். நானும் இந்த முகாமில் பல நல்ல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். என் கைகள் கட்டப்பட்டுள்ளது. அரசின் கட்டளையின் படி நான் செயல்படவேண்டும். இனியும் தொடர்நது இராணுவத்தில் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. நான் இநத முகாம் மூடியவுடன் ரிட்டையராகத் தீர்மானித்துவிட்டேன்.” என்றார் மேஜர் வின்சென்ட்.

“ அது நல்ல முடிவு மேஜர். இங்கு வேலை செய்வதினால் சரியான மன அழுத்தம் உங்களுக்கு எற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்”.

“ சரியாக ஊகித்துள்ளீர் ஜோன். எனது பிளட் பிரசரை, முகாமில் இருக்கும் என் நண்பர் டாக்டர் ராஜா தினமும் இங்கு வந்து செக்பண்ணுவார்.”

“அவரை ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமா மேஜர்”?

“ ஏன் இல்லை. டாக்டர் ராஜாவை கொழும்பில் இருந்தே தெரியும். அவர் மகள் சாந்தியைச் சிறுமியாக இருக்கும் காலம் முதல் கொண்டே தெரியும். தகப்பனும் மகளும் நல்ல மனம் படைத்தவர்கள்” என்றார் மேஜர்.

மூவரும் அவ்ர சொன்னதை எதிர்பார்கவில்லை.

“ சரி மேஜர். நேரம் மாகிவிட்டது. இன்று இரவு அனுராதபுரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி விட்டு, நாளை காலை கொழும்புக்குப் போகிறோம். எங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தந்த உங்களுக்கும், உங்கள் ஊழியர்களுக்கும்  எங்கள் மூவர் சார்பில் நான் நன்றி தெரிவிக்கிறேன்”, ஜோன் சொன்னார்.

அப்போ ஜோன் நீர் எப்ப திரும்பவும் கனடாவுக்கப் பயணம்”” மேஜர் கேட்டார.

“ இன்னும் மூன்று தினங்களில கனடாவுக்குத் திரும்புகிறேன். நீர் கனடா வந்தால் என்னை மறக்காமல் சந்தியும்” எனக் கூறிவிட்டு விடைபெற்றார் ஜோன் .

******

Series Navigation“முள்வேலிக்குப் பின்னால் “ – 7 இராமசாமிகியூபா – 50 ஆண்டு – புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *