மூடிய விழிகள்

Spread the love

குரும்பையூர் பொன் சிவராசா

மூடிய விழிகள்

தூக்கமில்லா உள்ளம்

கனவுகள் அல்ல

கனத்த இதயம்

பேசியது என்னுடனே

அந்த நடு ராத்திரியில்

நல்லவர் போல் வேசம்

வல்லவர் போல் நடிப்பு

பகட்டான வாழ்க்கை

தற்பெருமைப் பேச்சு

இரந்து வேண்டும்

பட்டங்கள் பதவிகள்

அரசியல் வாதியையும்

அதி பணக்காரரையும்

அண்டிப் பிழைக்கும்

அவலம்

அடுத்தவன் துன்பத்தை

அசை போட்டு மகிழும்

மனிதர்கள்…..

மூடிய விழிகள்

தூக்கமில்லா உள்ளம்

Series Navigationகாதல் அன்றும் இன்றும்எஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்