மெக்காவை தேடி -2

author
0 minutes, 6 seconds Read
This entry is part 20 of 21 in the series 10 ஜூலை 2016

பக்கீர் ராஜா

542bd5511ffe6முந்தைய பகுதிகளிலே பார்த்த ஹதீஸ்களின் அடிப்படையிலே இன்றைய மெக்கா மற்றும் மெதீனா போன்ற நகரங்களின் அமைப்பு, சூழ்நிலை போன்றவை ஒத்துப்போகிறதா என ஆராய்கிறார் கனேடிய வரலாற்று ஆசிரியரும் ஆய்வாளரும் ஆன டேன் கிப்ஸன். அவர் எழுதிய “குரானிய நிலவமைப்பு” எனும் நூலின் அடிப்படையிலே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மெக்காவை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது? எல்லா நகரங்களின் தாய் நகரம் என மெக்காவை பற்றிய வர்ணனை இருக்கிறது. அப்படியானால் மிகப்பெரும் நகரமாகவோ அல்லது அருமையான கட்டிடங்கள், பொது இடங்கள், மாட மாளிகைகள், பூங்காக்கள், கோட்டை, கொத்தளம் முதலானவை கொண்ட இடமாகவோ மெக்கா இருந்திருக்கவேண்டும் இல்லையா?

ஆனால் இன்றைய மெக்காவிலே அப்படி ஒரு அமைப்பு இருந்ததாக எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அதிலும் கிபி 900 ஆம் ஆண்டுக்கு முன்பான எந்த ஒரு அகழ்வாரய்வு தடயமும் இதுவரை இன்றைய மெக்காவிலே கிடைக்கவில்லை.

(http://religionresearchinstitute.org/mecca/archeology.htm)

நகரங்களின் தாய் என சொல்லுவதை புகழ்ச்சியாக எடுத்துக்கொண்டாலும் கிபி 600 ஆம் ஆண்டிலே மக்கள் வாழ்ந்ததாக ஏதேனும் அகழ்ராய்வு தடயங்கள் கிடைக்க வேண்டும் அல்லவா? அப்படி பட்ட ஏதும் கிடைக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

அடுத்து மெக்காவை பற்றி குறிப்பிடப்படும் விஷயம், வணிகப்பாதையின் இடமாக இருந்தது. வணிகர்கள் கூடும் இடமாக இருந்தது என்பது தான். ஆனால் மெக்கா ஒரு வறண்ட நிலம். வறண்ட நிலத்திற்கு வணிகர்கள் வருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை. விளை நிலங்களோ அல்லது ஏதேனும் உற்பத்தி செய்யும் இடமாக இருந்தால் வணிகர்கள் வருவார்கள். இல்லையேல் ஏதேனும் பாதையிலே இருக்கவேண்டும்.

கூடவே மெக்கா கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் தான் இருக்கிறது. அதுவும் அரேபியாவின் நடுவிலே. கப்பலில் வருபவர்கள் அங்கே வர சாத்தியமில்லை. கால்நடையாக வருபவர்களோ ஈராக்கில் இருந்து மெக்காவிற்கு வந்து பின்னர் திரும்பவும் சிரியாவிற்கோ அல்லது ஜெருசலமிற்கோ அல்லது எகிப்திற்கோ போகவேண்டியதில்லை. ஏமனில் இருந்து போபவர்கள் நேரடியாக எகிப்து போய்விடலாம்.

(https://en.wikipedia.org/wiki/Incense_Route )

ஏமனில் இருந்து கப்பலில் எகிப்து போவது என்பது மிகவும் எளிது. ஈராக்கில் இருந்து நேரடியாக ஜெருசலேம் வழியாக எகிப்திற்கோ அல்லது ரோமானிய துறைமுகங்களுக்கோ போவது என்பது குறைவான தொலைவு தான். ஈராக்கிலே இருந்து மெக்கா, மெதீனா போன்றவை 1500 கிலோமிட்டர் தூரத்திலே இருக்கின்றன. ஒப்பீட்டளவிலே தமிழ்நாட்டிலே இருந்து டெல்லி வரையிலான தூரம். வணிகர்கள் யாரும் அவ்வளவு தூரம் வந்து போகவேண்டிய அவசயமில்லை. பெரும் நகரம் எனவே வந்திருப்பார்கள் என்றால் அதற்கான தடயங்கள் கொஞ்சமேனும் கிடைக்கவேண்டும்.

இதை தவிர்த்து வணிகர்கள் வர காரணமாக அதிக மக்கள் கூடும் சந்தை இருக்கலாம் அல்லது மெக்காவிலே விலைமதிப்பு மிக்க பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் மெக்காவின் மக்கள் தொகை மிகவும் சிறியதே. கூடவே மெக்காவில் தோல்பொருட்களும் கரடுமுரடான துணிகளும் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. எனவே வணிகப்பாதையோ வணிகர்களோ இன்றைய மெக்காவிற்கு வந்திருக்கவேண்டிய காரணங்கள் இல்லை.

ஒருவேளை ஒரு காலத்திலே மெக்கா பெரும் வணிக நகரமாக இருந்திருக்குமானால் அன்றைய காலகட்ட வரைபடங்களிலே அல்லது நூல்களிலே மெக்கா குறிப்பிடப்பட்டிருக்கும் இல்லையா? ஆனால் அப்படியான ஆதாரங்கள் ஏதுமில்லை. கிபி 900 வரை மெக்காவின் பெயரோ அல்லது இடமோ எந்த ஒரு வரைபடத்திலும் இல்லை. ரோமானியர்கள் தாங்கள் வியாபாரம் செய்த சந்தைகளை பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழக துறைமுகங்கள் எல்லாம் ரோமானிய வரைபடங்களிலே உண்டு. இங்கே ரோமானிய காசுகள் , ரோமானிய அரசர்களின் பெயரும் படமும் கொண்ட காசுகள் தமிழகத்திலே கிடைத்திருக்கின்றன. ஆனால் மெக்காவை பற்றி அப்படி ஒரு குறிப்பும் இல்லை.

அடுத்து நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலைகள், இடங்கள் எல்லாம் இன்றைய மெக்காவிலே இருக்கிறதா எனவும் பார்க்கலாம். இஸ்லாமிய நூல்களிலே மெக்கா ஒரு பள்ளத்தாக்கிலே இருப்பது எனவும் அருகிலே இன்னோர் சிறிய பள்ளத்தாக்கு அல்லது நீரோடை இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மலைகள் சூழ்ந்த நகரம் எனவும் யேமனி யானைப்படைகள் மெக்காவை தாக்கிய பொழுது மெக்கா நகர மக்கள் அந்த மலைகளில் ஏறி யானைகள் வருவதை கண்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்றைய மெக்கா பள்ளத்தாக்கிலே இல்லை. அருகே ஏதும் நீரோடை இல்லை. கூடவே அருகே இருக்கும் சிறிய பாறைகளோ அரை கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்றன. மற்ற மலைகள் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்றன. மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து படைகள் வருவதை பார்க்கமுடியுமா?

மேலும் சபா மற்றும் மர்வா மலைகள் இன்று மசூதியின் உள்ளேயே அடங்கும் அளவுக்கு சிறியவை. மேலும் ஹிரா மலை ஆனது மெக்காவின் பகுதி எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றைய மெக்காவில் ஹிரா மலை இல்லை. ஹிரா மலை மெக்காவை நோக்கியும் இல்லை. ( https://en.wikipedia.org/wiki/Jabal_al-Nour ). எனவே இந்த இட அமைப்பு பற்றி சொல்லப்படுபவைகளும் ஒத்துப்போவதில்லை.

அடுத்து, விவசாயமும் தாவரங்களும். மெக்காவில் புல்வெளிகள் இருந்ததாக நூல்கள் சொல்கிறன. ஆனால் இன்றைய மெக்காவோ பாலைவன மணலையே கொண்டிருக்கிறது. அதிலே புல் வளருவது என்பது நடவாத காரியம். மேலும் முன்பு எக்காலத்திலும் தாவரங்கள் மெக்காவில் இருந்தாக எந்த தடயமும் இல்லை.

இஸ்லாமிய வரலாற்று அறிஞர் ஆன அல் தாபரி , இஸ்லாத்தின் தூதரான முகமதுவின் தகப்பனார் அப்துல்லா தன்னுடைய இன்னோர் மனைவியை பார்க்க போனதை பற்றி குறிப்பிடுகிறார். அப்போது அப்துல்லா, நிலத்திலே வேலை செய்துவிட்டு போனதாகவும், உடையிலும் கைகளிலும் மண் ஒட்டியிருந்தாகவும் குறிப்பிடுகிறார். இதனால் அப்துல்லாவின் மனைவி அவரை காக்க வைத்தாகவும் பின்னர் தன்னை சுத்தம் செய்து கொண்டு அப்துல்லா தன்னுடைய இன்னோர் மனைவியான அமினாவிடம் சென்றார். அப்போது தான் முகமது கருவில் உருவாகிறார். இந்த இடத்தில் விவசாயம் செய்யும் நிலம் இருந்ததாகவும், களிமண், சேற்று மண் போன்றவையும் குறிப்படுகின்றன. ஆனால் இன்றைய மெக்காவிலே அதற்கான தடயங்கள் ஏதுமில்லை. எனவே இந்த குறிப்பும் இன்றைய மெக்காவை பற்றி ஒத்துப்போவதில்லை.

விவசாயம் மட்டும் அல்லாது, மெக்கா ஆனது சிறு மாவட்டங்களாக பிரிக்கபட்டிருந்தாகவும் மரங்களும் சோலைகளும் சூழ்ந்திருந்தாகவும் குறிப்பிடப்படுகிறது. கனி தரும் மரங்களும் திராட்சை தோட்டங்களும் மெக்காவை சுற்றி இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. திராட்சை தோட்டங்களும் கனிதரும் மரங்களும் இருக்கவேண்டும் என்றால் ஏதேனும் நீர் ஆதாரம் இருக்கவேண்டும், ஆறு, குளம், ஏரி, போன்றவை இருக்கவேண்டும் அதிலே இருந்து நீர் பாய்ச்சும் வசதிகளும் அதற்கான வடிவமைப்புகளும் இருக்கவேண்டும். இன்றைய மெக்காவின் நிலை இதற்கு ஒத்துப்போகிறதா?

இதையெல்லாம் விட, மெக்கா பெரும் ராணுவத்தை வைத்திருந்த நகரமாகவும் குறிப்பிடப்படுகிறது. நூற்றுக்கணக்கான படைவீரர்கள், ஆயிரக்கணக்கான ஒட்டங்களை கொண்டிருந்தது எனவும் ஒரு முறை 10,000 வீரர்களை கொண்ட படை மெக்காவில் இருந்து கிளம்பி மதீனா நகரை தாக்கியதாவும் இஸ்லாமிய நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒரு சிறு நகரம் எப்படி இவ்வளவு பெரிய படையை திரட்ட முடிந்திருக்கும்?

10,000 வீரர்கள் என்றால் 10,000 குடும்பங்கள் என கொள்ளலாம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 பேர் என கொண்டால். ஆனால் நகரத்திலே இருக்கும் ஆண்கள் அனைவரும் போருக்கு போக முடியாது, கொஞ்சம் பேராவது தங்கியிருக்கவேண்டும், பெண்கள், வயதானவர்கள், பராமரிப்பு வேலை செய்பவர்கள், போரிட தெரியாதவர்கள், முடியாதவர்கள் என கொண்டால் 100 பேருக்கு 10 பேர் போகலாம் என வைத்துக்கொண்டாலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இருந்திருக்கவேண்டும். அப்படி இருப்பவர்களுக்கு வீடு, உணவு , உடை போன்றவை அங்கேயே கிடைத்திருக்கவேண்டும். இன்றைய மெக்காவிலோ அப்படி ஏதும் தடயங்கள் கிடைக்கவில்லை.

மெக்காவிலே பெரும் சுவர்கள் இருந்தன எனவும் கல்லை வீசி தாக்கும் பெரும் எந்திரங்கள் கொண்டு எதிரிகள் மெக்காவை தாக்கினார்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி இருந்ததாகவோ அல்லது அப்படி வீசி எறியபட்ட கற்கள் இருந்ததாகவோ எந்த விதமான தடயமும் இல்லை. இதை எழுதும் அல் தாபரி எனும் வரலாற்று ஆசிரியர் பள்ளத்தாக்குகள் வழியே ரகசியமாக நுழையும் படை தீடீரென மெக்காவை தாக்குவதை பற்றி குறிப்பிடுகிறார். இந்த இடத்திலே ஏமனிய யானைப்படை வருவதை மெக்காவின் மக்கள் மலை மீது ஏறி பார்த்ததை ஓப்பிட்டு பார்க்கவும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரணாக இருக்கிறன.

இந்த முரண்பாடான தகவல்கள், ஆராய்ச்சியாளர்களை இன்றைய மெக்கா தான் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெக்காவா என ஆராய வைத்தது.

Series Navigationமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரிஎஸ் அற்புதராஜ் மொழியாக்கத்தில் சத்யஜித் ரே சிறுகதைகள் வெளியீட்டு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *