மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்

பாதல்சர்க்காரின் தமிழக நாடகப் பயிற்சிப் பட்டறையின் தாக்கத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூரில் தீவிரமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் வீதி நாடகங்களை முன்னின்று நடத்தியது ..

அதில் குறிப்பிடத்தக்கதாய் ஞானராஜசேகரனின்  “ வயிறு “ , அறந்தை நாராயணனின்  “ மூர்மார்கெட் “ , ஜெயந்தனின் “  இயக்கவிதிகள் ”உட்பட மூன்று நாடகங்கள்,                   சி ஆர ரவீந்திரனின் ” பசு “ ,                           கேஜி சங்கரப்பிளையின் ” கழுதையும் கிழவனும் “ , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ , ” ஓ ..சாஸ்நல்லா சுரங்கச்  சகோதரர்களே “ , உட்பட சுமார் 20 நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

இதைத் தவிர பனியன் தொழிலாளர், நெசவாளர் போராட்ட காலங்களிலும் , தேர்தல் காலங்களிலும் பஞ்சப்படி, நெசவு, நாற்காலி, வாக்கு போன்ற பத்துக்கும்  மேற்பட்ட நாடகங்கள் திருப்பூரின் பல்வேறு பகுதி வீதிகளில் நூற்றுக்கணக்கான முறைகள்  நடத்தப்பட்டன.

இவற்றை ஆரம்பத்தில் நானும்,  பின்னர் மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரும் இயக்கினோம்., இவர்களில் மற்ற இரு தோழர்களும் பனியன் தொழிலாளிகள் .

இவற்றில்  மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோர் பல நாடகப்பிரதிகளை உருவாக்கினர். ஆனால் அவர்களின் நாடகங்கள் அச்சுருவோ, புத்தக வடிவமோ பெறவில்லை

என் வானொலி நாடகங்களும் , சில மேடை நாடகங்களும்  “ மணல் வீடு  “ என்ற பெயரில் ஒரு தொகுப்பாக வந்துள்ளது. இதில் இடம் பெற்ற “  பசுமை எனும் தாய்மை “  என்ற சுற்றுச்சூழல் சார்ந்த நாடகம் கோவை வானொலி மூலம் தேசிய நாடக விழாவில் இடம்பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மறு ஒலிபரப்புகள் செய்யப்பட்டன .இதில் உள்ள நாடகங்களும் , “ பள்ளி மறு திறப்பு “ என்ற என் சிறுவர் கதைகள் நூலில் உள்ள பல கதைகளும் தாய்த்தமிழ்ப்பள்ளி மாணவர்களாலும் , பிற பள்ளி மாணவர்களாலும்  பலமுறை நாடகங்களாக நடிக்கப்பட்டன.

இவற்றில் ஜெயந்தனின் “  இயக்கவிதிகள் “ நாடகம் பேரா. இராமானுஜம், ஜெயந்தன் ஆகியோரின் மேற்பார்வையிலும், ஞானராஜசேகரனின்  “ வயிறு “ , ,                           , அயன்ஸ்கோவின் ” தலைவர் “ ஆகியவை புவியரசின் மேற்பார்வையிலும் ,

அறந்தை நாராயணனின்  “ மூர்மார்கெட் “அறந்தை நாராயணனின்   மேற்பார்வையிலும் நட்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

எண்பதுகளிம் மத்தியில் நான் என் தொலைபேசி துறைப்பணிக்காக ஹைதராபாத் சென்ற பின்னால் இந்த நாடக முயற்சிகள் குறைந்தன,

ஆனால் இந்நாடகமுயற்சிகள் இன்றும்  அவ்வப்போது தொடர்கின்றன.

அந்த வகையில் இவ்வாண்டில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  மாதக் கூட்டங்களில் அரசியல் கவிதைகளை தோழர் எஸ் ஏ காதர்-தனி நபர் நடிப்பு –  மோனே ஏக்டிங்க் வகையில் நாடகமாக்கினார். இவ்வாண்டின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  மாவட்ட மாநாட்டில்  தோழர் எஸ் ஏ காதர்   ஸ்ரீநிதியின் பங்கேற்பில் மதம் என்ற நாடகம் நடைபெற்றது. கோவை திலீப்குமாரின் சிறு நாடகமும் அம்மாநாட்டில் அரங்கேறியது .  (தோழர் எஸ் ஏ காதர்   25க்கும் மேற்பட்ட முழு நீள மேடை நாடகங்களை 70,80 களிலும் எழுதி இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் வயது 72. இன்னும் நாடக  ஆர்வத்துடன் இயங்கி வருகிறார். அவ்ர் இரு நாவல்கள் உட்பட  சில நூல்களை வெளியிட்டுள்ளார் . தோழர் எஸ் ஏ காதர்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் )

மறைந்த தோழர்கள் எஸ் ஏ பாலகிருஷ்ணன் , கே .பொன்னுசாமி ஆகியோரின் தடத்தில் நாடக முயற்சிகள் திருப்பூரில் தொடர்கின்றன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், வெண்மணி நாடகக் குழுக்களின் தொடர்ந்த நாடக செயல்பாடுகள் திருப்பூரில் குறிப்பிடத்தக்கவை .

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்