மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு
படைப்பிலக்கியவாதியும்பத்திரிகையாளருமானதிரு. லெட்சுமணன்முருகபூபதியின் 20 ஆவது நூல் சொல்லமறந்த கதைகளின்வெளியீட்டு அரங்கு கடந்த சனிக்கிழமை23-08-2014ஆம் திகதிமெல்பனில் Dandenong Central Senior Citizens Centreமண்டபத்தில்நடைபெற்றது.
இலங்கைகம்பன் கழகத்தின்ஸ்தாபக உறுப்பினரும் இலக்கியஆர்வலருமான திரு. கந்தையா குமாரதாசன்இந்நிகழ்வுக்குதலைமைதாங்கினார்.
அண்ணாவியர் இளையபத்மநாதன் – எழுத்தாளர்கள் திருமதிபுவனாஇராஜரட்ணம் – டொக்டர் நடேசன் – திரு. ஜெயராமசர்மா -சமூகப்பணியாளர்கள் திருவாளர்கள் இராஜரட்ணம் சிவநாதன் – நவரத்தினம் இளங்கோ – டொக்டர் சந்திரானந்த் – ஜனாப் ரஃபீக்முருகபூபதியுடன் வீரகேசரி நிறுவனத்தில் முன்னர் பணியாற்றியதிரு. சுப்பிரமணியம் தில்லைநாதன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றினர். திருமதி மாலதி முருகபூபதியின்வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.
எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் எப்பொழுதும் மக்களின்வாழ்வுப்பிரச்சினைகள் குறித்தே தமது எழுத்துக்களில் பதிவுசெய்து வருபவர்கள். தேசங்களின் தகவல்கள் – இனங்களின்அடையாளம் என்பன பற்றிய பதிவுகளே முதலில்செய்திகளாகவும் பின்னர் வரலாறுகளாகவும் உருவாகின்றன. இவற்றை எழுதுபவர்கள் சமூகப்பொறுப்புணர்ச்சியுடன் தமதுபடைப்புகளை – செய்திகளை எழுதினால்தான் அவை காலம்கடந்தும் பேசப்படும்.
ஒரு பத்திரிகையாளர் இலக்கிய படைப்பாளியாகவும் இருக்கும் பட்சத்தில் அவரது எழுத்துக்களில் இலக்கிய நயம் இழையோடிக்கொண்டே இருக்கும். அவ்வாறு எழுதப்பட்டவித்தியாசமான தொகுப்புதான் முருகபூபதி எழுதியிருக்கும்சொல்ல மறந்த கதைகள் நூல். இதில் இருப்பவை கதைகளா? கட்டுரைகளா? அல்லது சுயசரிதையா ? என்பதை வாசகர்களின்தீர்மானத்துக்கே அவர் விட்டுவிடுகிறார்.
எனக்கும் முருகபூபதிக்கும் இடையில் நீடிக்கும் நட்புறவுக்குவயது கால் நூற்றாண்டையும் கடந்துவிட்டது. 1986 இல்அவர்தமது இலக்கிய நண்பர்களுடன் யாழ்ப்பாணம் வருகைதந்தகாலத்தில் நாம் அங்கே கம்பன் கழகத்தை தொடங்கியிருந்தோம். அன்று முதல் அவருடனான இலக்கியநட்பு சகோதர வாஞ்சையுடனேயே தொடருகிறது. என்றுதலைமையுரை நிகழ்த்திய திரு.கந்தையா குமாரதாசன்தெரிவித்தார்.
சொல்ல மறந்த கதைகளில் இடம்பெற்ற படைப்புகளைதிருவாளர்கள் இளங்கோ நவரத்தினம் – ஆவூரான் சந்திரன், ஜெயராமசர்மா – டொக்டர் நடேசன் ஆகியோர் விமர்சித்தனர்.
கணக்காளர் திரு. ஏ.வி. முருகையா – திருவாளர்கள் சிவநாதன் – தில்லைநாதன் – ஜனாப் ரஃபீக் – டொக்டர் சந்திரானந்த் – மற்றும்மெல்பன் சங்கநாதம் வானொலி இயக்குநர்களில் ஒருவரான திரு. விக்கிரமசிங்கம் ஆகியோர் நூலின் சிறப்புபிரதிகளைப்பெற்றுக்கொண்டனர்.
முருகபூபதியின் மகள் திருமதி பிரியாதேவி முகுந்தன் பிரதிகளைவழங்கினார்.
இறுதியில் நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரைவழங்கினார். அதனைத்தொடர்ந்து தேநீர் விருந்து இடம்பெற்றது.
- வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.
- வல்லானை கொன்றான்
- நுனிப்புல் மேய்ச்சல்
- கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’
- பாஞ்சாலியின் புலம்பல்
- ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி
- 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி
- ஆனந்த் பவன் [நாடகம்] வையவன், சென்னை காட்சி : 3
- ஜெயமோகனின் புறப்பாடு
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 19
- இரா. நடராசனுக்கு ‘சாகித்ய அகடமி’ விருது
- காத்திருத்தலின் வலி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90
- வாழ்க்கை ஒரு வானவில் – 18
- பாவண்ணன் கவிதைகள்
- அவருக்கென்று ஒரு மனம்
- பசலை பூத்தே…
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- கவிஞர் நெப்போலியனின் ” காணாமல் போன கவிதைகள் ” நூலுக்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – ஆனந்தபவன் மு.கு. இராமச்சந்திரா 2014ம் ஆண்டுக்கான புத்தகப்பரிசு
- தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !
- அலைகள்
- மெல்பனில் நடந்த முருகபூபதியின் சொல்லமறந்தகதைகள் நூல் வெளியீட்டு அரங்கு
- தினம் என் பயணங்கள் -31 குடிநோயாளிகள் மறுவாழ்வு
- நுடக்குரங்கு
பின்னூட்டங்கள்